Apple Crumble/ஆப்பிள் க்ரும்பல்


இது இன்னைக்க்கு என் பெண்ணுக்கு சொல்லிக்கொடுத்தேன்

என் பெண்தான் செய்தது. நீங்களும் செய்து பாருங்கள். ரொம்பவும் Simple,சுலபம்.

இது ஆப்பிள் வெட்டத்தான் உங்களுக்கு கஷ்டம் கொடுக்கும்மற்றப்படி ஒற்றும் கஷ்டம் கிடையாது

சின்ன பிள்ளைகள் செய்யக்கூடிய டிஷ்தான் இது.

4 பேருக்கு தேவையான பொருள்கள்:

  • ஆப்பிள் 500 கிராம்
  • மைதா  125 கிராம்
  • சர்க்கரை  80 கிராம்
  • வெண்ணெய்  65 கிராம்
  • வனிலா எஸன்ஸ் 2 மேஜைக்கரண்டி


*உப்பு வெண்ணெய்யாக இருந்தால் ருசியாக இருக்கும்.

செய்வது எப்படி?

1)அவணை 180° முற்சூடு செய்துக்கொள்ளுங்கள்

2)ஆப்பிளை தோள் சீவி துண்டு போட்டுக்கொள்ளுங்கள்.


3)துண்டு போட்ட ஆப்பிளை அவண் தட்டில் வைத்து விடுங்கள்.




4)வெண்ணெய்யை துண்டு துண்டாக வெட்டவும்.







5)ஒரு பவுலில்  மைதா, சர்க்கரை வெண்ணெய் வனிலா எல்லாம் போட்டு கையின் விரல் நுனியால் கலக்கவும்.





6)கலந்து விடும்போது மணல் போல வரவேண்டும்.





7)அதுப்போல் வந்தவுடன் அந்த கலவையை ஆப்பிளின் மேல் தூவியது போல் போட வேண்டும்.





அழுத்தி போடக்கூடாது.

8)ஆப்பிளை நன்றாக மூடியதுப்போல் போட்டதும்,தட்டை அவணில் வைக்கவும்.45 நிமிடம் கழித்து எடுக்கவும்.




உங்கள் க்ரும்பல் ரெடியாக இருக்கும்.

இதனை நன்றாக ஆறிய பிறகும் சாப்பிடலாம்

வெதுவெதுப்பாக இருக்கும்போதும் சாப்பிடலாம்.




இப்போ சொல்லுங்க இது ரொம்போ சுலபமா இருக்கா இல்லையா?

copyright©kolly2wood.blogspot.com








Comments

Popular Posts