Pâte au saumon Fumé/சாலமோன் மீனில் கீரிமீ பாஸ்தா



இன்னைக்கு நம்ம பார்க்க போவது  மீன் ரெசிபி. இது  2 பேருக்கு தேவையான அளவு கொடுத்து இருக்கிறேன்.
இதுல நீங்க fresh மீன்னுலக்கூட செய்யலாம்


இப்போ ரெசிபியை பார்க்கலாமா?

தேவை
  • 300 கிராம் பாஸ்தா
  • 200 மில்லி கீரிம் (fresh cream)
  • 200 கிராம் ஸ்மோக்டு சலமோன் மீன்/smoked salmon/samoum fumé
  • 1/2 தேக்கரண்டி பூண்டுத்தூள்
  • 3 மேஜைக்கரண்டி பார்ஸி இலை/persil ou ciboulette/parsley or chive
  • உப்பு
  • மிளகுத்தூள்

செய்முறை:

1)பாஸ்தாவை வேக வைத்து வடித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
2)சாலமான் மீனை சின்னதாக வெட்டி வைத்துக்கொள்ளுங்கள். மிகவும் சின்னதாகவும் வேண்டாம்.

3)பார்ஸி இலையையும் வெட்டி வைத்துகொள்ளுங்கள்.

4)கீரிமுடன் இலை,உப்பு,மிளகுத்தூள்,பூண்டுத்தூள் போட்டு கலந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

5)அடுப்பில் கசரோலை வைத்து பாஸ்தா, கீரிம், சாலமன் மீன் எல்லாவற்றையும் கிண்டி விடவும்.

 அவ்வளவு தான்.ரொம்போeasy யா இருக்கு இல்லையா?

*இதுவே, fresh மீன் உபயோக படுத்துவதாக இருந்தால்
மீனை லேசாக அவித்து போட வேண்டும். ஆனால் அது நீங்கள்
எந்த பகுதியை வங்குகிறீர்கள் என்பதை பொருத்து இருக்கிறது

முழு மீன் எப்போதும் ஒருவித வாடை அடிக்கும்

*கீரிம் ரொம்போ கட்டியா இருக்குனா . கொஞ்சமா பால் ஊத்திக்கலாம்.

copyright©Mar2014 Kolly2wood.blogspot.com


Comments

Popular Posts