மஷ்ரும் ஸோஸ்

இந்த ரெசிபி ஒரு பத்திய ரெசிபி என்று கூட சொல்லலாம்.

     


ஒரு சில போருக்கு மைதா மாவு ஒத்துகொள்ளாது. அதுவும் இந்த நாட்டில் அது மிகவும் தொல்லை பிடித்த சமாச்சாரம். ஏன் என்று கேட்கிறீகளா?

      நாம் நாட்டு சாப்பாடு சோறு என்றால், இன்னாட்டில் கோதுமை,மைதா தானே!! அதுவே ஒத்துக்கொள்ளவில்லை என்றால்!!!!!!??????? கஷ்டம் தானே?

ஆனால், எல்லாத்துக்கும் அதுக்கு பதில் ஒன்று இருக்கிறது.
கோதுமை ஒத்துக்கொள்ளாதவர்களுக்கு அரிசி ஒத்துக்கொள்ளுக்கிறது.

     அப்படி ஒருமுறை வந்த நண்பரை சமாளிக்க நான் கண்டுபிடித்த ஸோஸ்தான் இது. அவர்களுக்கு பிடித்து இருந்தது.



    உங்களுக்கும் ரெசிப்பியை பகிர்ந்து கொள்கிறேன்.


யோசித்ததில் போட்டது:

  • வெங்காயம் 2
  • பூண்டு   3 பல்
  • மஷ்ரூம்  300 கிராம்
  • பச்சை பட்டாணி 500 கிராம்
  • பசிலிக்  1/2 தேக்கரண்டி
  • சிக்கன் ஸ்டாக் 1 க்கீப்/cube
  • அரிசி மாவு  4 மேஜைக்கரண்டி
  • ஒயிட் ஓயின் /white wine  4 மேஜைக்கரண்டி(வேண்டுமானால்)
  • ஆலிவ் எண்ணெய் 3 மேஜைக்கரண்டி




யோசித்து செய்ததது:

1)வெங்காயம், பூண்டு அரிந்துக்கொள்ளவும்.

2)பச்சைபட்டாணி தனியாக வேகவைத்துக்கொள்ளவும்.

3)அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய்யை ஊற்றவும்.

4)எண்ணெய் காய்ந்ததும், வெங்காயத்தை போடவும்.








5)வெங்காயம் சிவந்ததும்,
அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிண்டவும்








6)திரண்டு வரும் போது ஒயிட் ஒயின் அல்லது தண்ணீரை ஊற்றவும்.








7)மஷ்ரூமை தனியாக வதக்கி ஸோஸில் சேர்க்கவும்.

8)வேகவைத்த பச்சைப்பட்டாணியை ஸோஸில் சேர்க்கவும்.





9)உப்பு,மிளகு பசலிக் சேர்க்கவும்.

10)கொதித்து கொண்டு இருக்கும் ஸோஸ் திரண்டு வந்ததும் இறக்கி வைக்கவும்.

*நிறைய தண்ணீர் ஊற்ற வேண்டாம்.  


இதனை நீங்கள் பாஸ்தாவுடனும் சாப்பிடலாம்
விஜிடேரியன் தான்.
பொலான்டாவுனும் சாப்பிடலாம்.



சோற்றுடனும் சாப்பிடலாம்.

copyright©Mar2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts