Clafoutis/க்ளாஃப்ளுட்டி

    இது பழங்கள் போட்டு செய்யும் கேக் வகையை சார்ந்தது. இது பிரான்சில் Auvergne/ ஓவர்வனில் தயரிக்கும் கேக்.




இதை பழமையான முறையில் எப்படி செய்தார்கள் என்று பார்ப்போமா?

தேவையான பொருட்கள்:

  • 600 கிராம்செர்ரி  பழம்
  • 100 கிராம் மைதா
  • 100 கிராம் சர்க்கரை
  • 300 மில்லி பால்
  • 2 முட்டை
  • 30 கிராம் வெண்ணெய்வனிலா எஸன்ஸ்


செய்யும் முறை:

1)ஒரு பவுலில் மைதா,சர்க்கரை போட்டு கலக்கவும்.

2)அதிலேயே முட்டையையும் உடைத்து ஊற்றவும். நன்றாக கலக்கவும்.






3)அதனை நன்றாக கலந்துக்கொண்டே பாலை ஊற்றி கலக்கவும்.







4)25 கிராம் வெண்ணெய்யை உருக்கி அதிலேயே ஊற்றி கலந்து விடவும்.








5) 5 கிராம் வெண்ணெய்யை அவணில் வைக்கும் தட்டில் தடவவும்.

6)வெண்ணெய் தடவிய தட்டில் பழத்தை போட்டவும்.

7)பழத்தின் மேல் நாம் கலந்து வைத்துள்ள கலவையை ஊற்றவும்.





8)அவணை 200° முற்ச்சூடு செய்யவும்.

9)அவணில் வைக்கவும்.

10)35 நிமிடம் வைத்து எடுக்கவும்.






11)ஆறியவுடன் சாப்பிடவும்.




இங்கு நான் செய்து இருப்பது செர்ரி பழத்தில் clafoutis.

செர்ரிப்பழம் கிடைக்கவில்லை என்றால் ஆப்பிளில் செய்யலாம்.


copyright©kolly2wood.blogspot.com

Comments

Popular Posts