தாய்மை அனுபம் 15

   
ஏழில் இருந்து எட்டு மாத குழந்தைகள்  பேச ஆரம்பிக்கும் நாம் சொல்ல சொல்ல ஒசை மட்டும்  எழுப்பும் வார்த்தைகள் வராது. தாதாதா..... ,ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என்று ஏதாவது சொல்லும் நாமும் அதனுடன் பேச வேண்டும்நிறைய ஒசை கேட்க ஆசை படும்.

    நாம் விளையாட்டு பொருள்கள்தான் வாங்கி கொடுத்து 
பிள்ளைகளுக்கு ஒசையை கேட்டும் திறனை வளர்க்க வேண்டும் 
என்று கிடையாது.

புத்தக்கத்தில் இருக்கும் சின்ன சின்ன மிருகங்கள், இசை
கருவிகளை காட்டி அதன் ஓசை எப்படி இருக்கும் என்று காட்டலாம்

உதரணமாக: மிருகத்தில் மாடு எடுத்துக்கொண்டால், மாட்டை காட்டி: மாடு பாத்திங்களா? வெள்ளையா,கருப்பு புள்ளி எல்லாம் வைச்சு இருக்கு. இது தான் பால் கொடுக்குது. இது எப்படி கத்தும். தெரியுமா? இப்போ அப்பா () அம்மா கத்தி காட்டவா? ம்மாம்மா. மாடு தொடுங்க  என்று சொல்லாம்.

      இசை கருவி என்றால், உதரணமாக மோளம் வைத்துக்கொள்ள்வோம்: மோளம் பாத்தியா, எவ்வளவ்வு பெருச இருக்குஇது எப்படி சத்தம் கேக்கும் தெரியுமா? டும் டும் டும். இப்படி கூட செய்யலாம்.

    பிள்ளையின் விளையாட்டு பொருளை மறைத்து வைத்து விட்டு எங்கே என்று தேட சொல்லாம். பந்தை உங்கள் துப்பட்டவில் மறைத்து வைத்து விடலாம். இப்படி.

    குழந்தைக்கு மிகவும் பிடித்தது. கரண்டியை தரையில் போடுவது . கரண்டியால் மேஜையை அல்லது அதன் தட்டில் தட்டி விளையாடுவது. ஏன் என்றால் அது சத்தம் தருகிறது அல்லவா?
எப்போதும் அதனால், அதன் சாப்பாட்டு நாற்காலியில் இருந்து அதன் தட்டு,கரண்டி ஏதாவது கிழே போட்டு கொண்டே இருப்பார்கள். இது அவர்களுக்கு ஒரு பிடித்த விளையாட்டு.
      அதனால் என் பிள்ளைக்களுக்கு நான் அடுப்பாங்கரையில் 
வேலைசெய்யும் போது கொடுக்கும் விளையாட்டு என்ன தெரியுமா?
ஒரு கரண்டியும் ஒரு கசரோலும். அது போதும் அவர்களுக்கு. உங்களை வேலை செய்ய விட்டு விடுவார்கள்.

அவர்கள் விளையாட்டு சாமான்கள் ஒரு வண்டி இருந்தாலும் அது எல்லாம் வேலைக்கு ஆகாது. இது என் அனுபவம்.
என்ன ஒன்று அவர்கள் அடிக்கும் கோயில் மணி ஒசை நமக்கு தலை வலிக்கும்

   எதையும் தாங்குவேன் பிள்ளைக்காக... நான் இதையும் தாங்குவேன் பிள்ளைக்காக . பிள்ளைக்காக ... என்று பாடிக்கொண்டே தாங்கிக்கொள்ள வேண்டியது தான்

   இங்கு இன்னும் ஒன்றும் சொல்ல ஆசை படுகின்றேன். நம் நாட்டை பொருத்த வரை 18 மொழிகள் இருக்கின்றன. இப்போது வெளிநாடுகள் போலவே நம் நாட்டிலும் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். வெளிநாடுகள் போலவே உடைகள்,நாகரிகங்கள்   நல்லதுதான்.               வெளிநாடுகளிலும் அடுத்த நாடுகளை பார்த்து காப்பி 
அடிக்கிறார்கள்தான். இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால், அவர்கள் மொழியை விட்டு கொடுக்கவில்லை. ஜெர்மன்காரரும் பிரஞ்சுகார்ரும் திருமணம் செய்துக்கொண்டால், அந்த பிள்ளை, அந்த இரண்டு மொழிகளையும் தான் பேசுகிறது.

       எல்லாவற்றையும் காப்பி அடிக்கும் நாம் இதை மட்டும் ஏன் மறந்தோம்?
பிள்ளைக்கு உங்கள் தாய்,தந்தை மொழிகளை கற்றுக்கொடுங்கள்.வளரும் மாநில மொழியும், நாட்டு மொழியும் கற்றுக்கொடுங்கள்.
பிள்ளை வளர்ப்பில் இதுவும் ஒரு பகுதிதானே?.எல்லாருடனும் பேசுவது. பழகுவது.

     காலையில் எழுந்தும் நல்லா தூங்கினாயா? செல்லம் என்று கேளுங்கள்.வீட்டிற்கு  யாராவது வந்தால் அவர்களை வரவேற்க செல்லிக்கொடுங்கள்.

  போகும் போதும் மட்டும் டாடா சொல்லி கொடுப்பது பழக்கம் க்கி விடுகிறார்கள்.

     நீங்கள் ஏதாவது கொடுத்தால் கூட நன்றி சொல்ல சொல்லி கொடுங்கள். இது எல்லாம் பிள்ளை வாய் திறந்து சொல்ல தேவையில்லை 
சின்ன கையை வைத்து ஏதாவது செய்கை செயதாலே போதும்.

மீண்டும் அடுத்த முறை பார்போம்

copyright©Mar2014.kolly2wood.blogspot.com

Comments

Popular Posts