தாய்மை அனுபம் 17

     இப்பொழுது தான் பிறந்ததுப்போல் இருக்கிறது அதற்க்குள்  11 மாதம் ஆகி விட்டது நம் செல்லக்குட்டிக்கு.

     சின்ன சின்ன கை,கால்கள் முலைத்து அது தரையில் ஊற்றி நாம் பெற்ற செல்வம் தவழ்ந்து இன்று தட்டி தடிமாறு நிற்க்கும் நிலைக்கு வந்து விட்டது.

   "உடனே இந்த கேமிரா எங்கு போய் விட்டது? என் செல்லம் இப்பொழுதுதான் முதல் முதலில் நிற்கிறது, அதனை போட்டோ எடுக்க வேண்டாமா!

சே! இந்த கேமிரா இப்போதான் எங்காவது போய்விடும். இந்த மனுஷன் எங்காவது வைத்துவிடுவார்."

     இது முதல் முதல் எந்த செயல் நம் பிள்ளை செய்தாலும் நாம் செய்யும் பெரிய ஆராபாட்டம்தான்.

அது உட்கார்ந்தா போட்டோ,நின்னா போட்டோ,நடந்தா போட்டோ....

     இதில் வெடிக்கை என்னவென்றால், மனித ஒற்றுமை இதில்தான் ஒன்றாக இருக்கிறது.

     இதுமாதிரி திட்டுவது,தேடுவது,போட்டோ பிடிப்பது.இதில் எல்லாம். வாழ்க வளர்க மனிதர் ஒற்றுமை இதிலாவது.

     சரி நான் சொல்ல வந்ததை சொல்லுகிறேன்.

     இந்த மாததிலிருந்து நம் செல்லக்குட்டி கையை ஊற்றி நிற்க துடங்கும்.எதையாவது பிடித்துக்கொண்டு.

     கையை பிடித்துக்கொண்டு சில பிள்ளைகள் நடக்க ஆசைப்படுவார்கள். நடக்க விடுங்கள்.

     ஒன்று சொல்ல மறந்து விட்டேன். நாலுக்காலில் நடக்கும் என்று சொன்னேன் அல்லவா? சில பிள்ளைகள் ஒன்று விட்டு ஒன்றுக்கூட செய்வார்கள்.கவலைப்பட வேண்டாம்.

     அதாவது நாலுக்காலில் நடக்காமல் நேராக நடந்து விடுவார்கள். முட்டி தரையில் படுவது பிடிக்காது.

     ஒரு சில பிள்ளைக்கள் எல்லாமே மற்ற பிள்ளைகளை விட சீக்கிரமே செய்வார்கள். ஒரு சில பிள்ளைகள் எல்லா செயல்களையும் நிறுத்தி நிதானமாக செய்வார்கள்.

     அதற்க்கு காரணங்களும் இருக்கும். நாம் வயறில் வைத்துக்கொண்டு சிந்திக்கும் சிந்தனை,அவர்களுக்கு வரும் நோய் இப்படி பலவும் உண்டு. சில பிள்ளைகள் இதனை எல்லாம் மீறி சீக்கிரமாக எல்லாம் செய்பவர்களும் உண்டு.

     நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் பிள்ளையுடன் மற்ற பிள்ளைகளை ஒப்பிட வேண்டாம்.

     பிள்ளைகள் பேச ஆரம்பிக்கும் நாட்களும் இதுதான். அதன் எதிரில் திட்டும் வார்த்தைகளை தவிர்த்து விடுகள்.

     முக்கியமாக இது அம்மா அவர்களுக்கு. பிள்ளைகள் அம்மா என்பதை விட அப்பா என்பதை சீக்கிரமாக சொல்லி விடும். அது சுலபமாக வரும். பொறமை படாதீர்கள்.

     சின்ன சின்ன கதைப்புத்தகம் வைத்துக்கொண்டு கதைகள் படம் காட்டி கதைகள் சொல்லுங்கள்.

     அது இஷ்டத்திற்க்கு பக்கங்களை திருப்ப விடாதீர்கள். ஒரு நாளைக்கு ஒரு கதைதான், ஒரு புத்தகத்தில் என்று பழகுங்கள். அதிலும் இரவில் தூங்கும் முன்பு படித்து விட்டு தூங்க வைக்கலாம். நடுவிலும் படித்து காட்டலாம் தப்பு கிடையாது.

   யாரவது பரிசு பொருட்கள் கொடுத்தால்பரிசுபொருள்  மேல் சுற்றி
 இருக்கும் தாளை கிழித்து விடுவார்கள். பிள்ளையிடமே கொடுத்து, அதுக்கூடவே நீங்கள் பரிசுபொருள்  மேல் சுற்றி இருக்கும் தாளை கிழிக்காமல் அழகாக பிரிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
 தாளை நீங்களே கிழித்தால் பிள்ளையும் கிழிக்க போகிறது.

       நல்ல வார்த்தைகள் நீங்கள் சொல்லிக்கொடுங்ள். இப்பொழுதான் ஆங்கிலம் கலந்துதானே பேசுகிறோம். அதனால் எதையாவது பிள்ளைக்கு வேலை கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். "அந்த பந்தை எடுத்து வா" ப்ளீஸ்" என்று சொல்லலாம். எடுத்து வந்ததும். "தேங்ஸ் "என்று சொல்லலாம்.

காலையில் எழுந்ததும் "குட் மார்னிங்", அதுவே இரவு தூங்கும் முன்
 "குட் நைட் "என்று சொல்லலாம்.

     கதை சொல்லும் போது  actionவுடன் சொல்லுங்கள். அதுதான் அவர்களுக்கு பிடிக்கும். சிரித்துக்கொண்டே கேட்பார்கள். சும்மா நானும் கதை சொல்லுகிறேன் என்று சொன்னால் ஒன்றும் கிடையாது.

       நான் எல்லாம் 20 வயதுக்கு மேல்க்கூட என் சித்தப்பா கதை சொன்னால் கேட்டுக்கொண்டே இருப்பேன். அவ்வளவு நன்றாக இருக்கும். இன்னும் கூட    நான் கதை கேட்க தயார். கதை சொல்ல அவர்கள் தயார் நிலையில் இல்லை. அந்த நாட்கள் திரும்ப கிடைக்க  வழி இனி கிடையாது. போயே போச்சு.

     உங்கள் வீட்டு கதவு அலமாரி கதவுகளில் சின்ன கைகளை வைத்து சாத்திக்கொள்ள போகிறார்கள். இது அடிக்கடி நடக்கும் ஆபத்து.

     இந்த வயதில் சிறு சிறு ஆபத்துகள் நடக்க வழிகள் உண்டு. அதனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால், நிரந்தரமாக  First -aid box ஒன்று வைத்துக்கொள்ளுங்கள்.

     கதவு காற்றில் தானாக சாத்தாமல் இருக்க எதாவது வைத்து விடுங்கள். ஒவ்வொரு முறையும் அலமாரியை சாத்தும் போது பிள்ளை பின்னால் நிற்கிறதா? என்று பார்த்து விட்டு சாத்துங்கள்.

     கரண்ட் ஒயர்கள், ப்ளக்  பயின்ட் இது எல்லாம் ஜாக்கிரதையாக வையுங்கள்.

     வீட்டில் செல்ல பிராணிகள் இருந்தால் கவனமாக இருக்கவும். அதனை, விளையாட்டு பொம்மை என்று நினைத்து பிடித்து இழுக்க போகிறது.

     அதனால் தான் விளையாட்டு பஞ்சு பொம்மையைக்கூட கண்டபடி விளையாட விடக்கூடாது. ஒரு சில பிள்ளைக்கள் பொம்மைகளை முடியை பிடித்து இழுத்து விளையாடுவார்கள். பஞ்சு பொம்மைகளையும் அவ்வாறே விளையாட செய்வார்கள்.

     நாம் அவ்வாறு செய்ய விடாமல், "அதற்க்கு வலிக்குமே அப்படி செய்யக்கூடாது. இப்படி தடவிக்கொடுக்கனும்" மெதுவா செய்யனும்" என்று சொல்லிக்கொடுக்க வேண்டும். நாம் சொல்லிக்கொடுப்பதில் தான் ஒவ்வொன்றும் இருக்கிறது.

     இந்த வயதிலிருந்து முகதில் இருக்கும் கண்,காது,மூக்கு இதுவெல்லாம் சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம்.

      தானாக பால் பாட்டில் பிடித்து குடிக்க ஆசைப்படும். கண்ணாடியால் ஆன எந்த பொருளையும் பிள்ளையின் கையில் கொடுக்க வேண்டாம்.

     கைப்பிடி வைத்த டம்பளர் போன்ற பால் பாட்டில் விற்கிறது அல்லவா! அதனை வாங்கி கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி முதலில் பிள்ளையின் கையில் கொடுங்கள். அது குடித்து விட்டு எங்கு பார்த்தாலும் உற்றி வைக்கும்.

       சாப்பிடும் போதும் தானாக சாப்பிட ஆசைப்படும். முதலில் சாப்பாடு கொடுத்து விடுங்கள். முடிவில் கரண்டியோ அல்லது கையால் சாப்பிடுகிறது என்றால் விட்டு விடுங்கள் சாப்பிடட்டும்.
இப்பொழுதிலிருந்து பழகினால்தான் நல்லது.

மீண்டும் சந்திப்போம்

copyright©Mar2014Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts