Gateau d'aubergines façon soufflé/கத்தரிக்காய் கேக்


கத்தரிக்காய் காயிலும் கேக் செய்யாலாம். இதிலும் விதவிதமான கேக்கள் இருக்கிறது




இது அதில் சுஃப்லே/soufflé என்னும் விதம். சுஃப்லே என்பதை எப்போதும் ஒரு பவுல் போன்ற அவணனில் வைக்கும் ஒரு கிண்ணதில் செய்வார்கள்.

மொத்தமான அலுமினிய கிண்ணம் அல்லது அது கிடைக்கவில்லை என்றால் அவணில் வைக்கும் தட்டில் செய்து விடுங்கள்.

இதற்க்கு வேண்டிய பொருள்:

  • 800 கிராம் கத்தரிக்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 6 முட்டை
  • 80 கிராம் துருவிய சீஸ்
  • 4 மேஜைக்கரண்டி பால்
  • 4 மேஜைக்கரண்டி எண்ணெய்
  • 2 சிட்டிக்கை ஜாதிக்காய் தூள்
  • உப்பு
  • மிளகுத்தூள்
  • பார்ஸில் இலை


செய்வது எப்படி:

1)வெங்காயம், கத்தரிக்காய் இரண்டையும் பொடியாக வெட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

2)200° அவண்னை முற்சூடு செய்துக்கொள்ளுங்கள்.

3)அவணில் வைக்கும் தட்டில் எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவி வைத்துக்கொள்ளுங்கள்.

4)அடுப்பில் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் சிவக்க விடவும்.

5)வெங்காயம் சிவந்ததும் அரிந்து வைத்துள்ள கத்தரிக்காயை போடவும்.






6)கத்தரிக்காய்  லேசாக சிவந்து வரும் போது உப்பு, மிளகுத்தூள், போடவும்.


7)முட்டையை அடிக்கவும்.






8)அடித்து வைத்துள்ள முட்டையில் சிவக்க வைத்த கத்தரிக்காயை போடவும்.






9)அதிலேயே துருவிய சீஸை போடவும். பால்,பார்ஸிலி இலை,ஜாதிக்காய் பொடி எல்லாம் போட்டு கலக்கவும்.





10)கலந்த கத்தரிக்காய் கலவையை தயாராய் எண்ணெய் தடவி வைத்துள்ள தட்டில் ஊற்றி அவணில் வைக்கவும்.







11)30அல்லது 45 நிமிடம் கழித்து எடுத்து சாப்பிடவும்.











 இது கேக் போலவே இருக்கும். நடுவில் வெந்து இருக்கிறதா? என்று பார்க்கவும்.
copyright©Mar2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts