சாக்லெட் ஸோசிசோன் /Saucisson au Chocolat

  இது பார்ப்ப்தற்கு உண்மையான *ஸோசிசோன் போலவே இருக்கும். என் பெண்ணின் நண்பி அல்ஜெரி நாட்டை சேர்ந்தவள் கிறிஸ்மஸ் சமையத்தில் வந்தவளை இதை கொடுத்து ஏமாற்றினோம். பிறகு சிரித்துக்கொண்டே சாப்பிட்டாள்.  

இதுதான் தேவையான பொருட்கள்:
  • 200 கிராம் மில்க் சாக்லெட் அல்லது டார்க் சாக்லெட்
  • 100 கிராம் முந்திரி பருப்பு
  • 100 கிராம் பிஸ்தா பருப்பு
  • 100 கிராம் வெண்ணெய்
  • 150 கிராம் மேரி பிஸ்கேட் போன்ற பிஸ்கேடுகள்.
  • 1 முட்டை
  • 100 கிராம் ஐசிங் ஷுகர்


செய்யலாம்

1)பிஸ்கெட்டுகளை சின்ன சின்னதாக ஒடைத்து விட்டு ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்வும்.
a)அதை தட்டையாக்கி பூரிகட்டை கொண்டு அதன் மேல் உருட்டவும். b)இப்பொழுது பிஸ்கெட் பவுடராகவும் இருக்கும். சின்ன துண்டுகளாகவும் இருக்கும் அல்லவா? இது போதும்.
2)முந்திரி பருப்பை உடைந்து வையுங்கள்.
3)சாக்லெட்டை (டபுள் ப்யிலர்  method )  உருக்கவும். உருகியதும்  4)அடுப்பிலிருந்து எடுத்து 50 கிராம் ஐசிங் ஸ்கரை போடவும் சீக்கிரமாக கலக்கி விட்டு முட்டையை போட்டு கலக்கி விடவும்.
5)பிஸ்க்கெட்,பருப்பு வகைகள் போட்டு சீக்கிரமாகக் கலக்கி விடவும்.
தண்ணீராக இருப்பதுப்போல் இருந்தால் பரவாயில்லை.
6)உடனே   cling film/film -étirable/alimentaire   (ப்ளாஸ்டிக்கில் இருக்கும்)  கொட்டி ஸோசிசோன் எப்படி இருக்குமோ அப்படியே  உருட்டவும்.
7)இறுக்கமாக உருட்டி இரண்டு பக்கமும் இறுக்மாக்கி கயிறுகாளால் கட்டி குளிர்சாதனபெட்டிக்குள் வைக்கவும்.
8)24 மணி நேரம் கழித்து எடுத்துப்பிரித்து பாருங்கள். உங்கள் ஸோசிசோன் ரெடி.
9)  மீதம் இருக்கும் ஐசிங் சுகரில் பிரட்டி எடுத்து வையுங்கள். அசல் saucisson தான்.
சுவைத்தும் மகிழலாம். மற்றவர்களுடன் சிறிது நேரம் எங்களைப்போல விளையாடியும் மகிழலாம்.
*ஸோசிசோன் என்பது வேறு 
*ஸோசேஞ் என்பது வேறு 

copyright©Jan 2014kolly2.blogspot.com

Comments

Popular Posts