தாய்மை அனுபம் 5


     குழந்தைக்கு தாய்பால் என்றாலும் பாட்டில் பால் என்றாலும் ஒரே கணக்கு தான். என்ன, பாட்டில் பால் என்றால் கணக்கு தெரியும் என்பிர்கள். அதுவெல்லாம் கிடையாது.

     எதுவாயிருந்தாலும், 3 மணி நேரத்திற்க்கு ஒருமுறை கொடுங்கள்.

      அப்பொழுது தான் பிள்ளைக்கு செறிக்கும் பிச்சனை வராதுமற்ற நேரங்களில் பால் தவிர தண்ணீர் கொடுங்கள். பாலே கொடுத்தால், பிள்ளை அதுவே பழகி அதையே கேட்டு அழும். 

     அதுவும், இந்த காலத்து பிள்ளைகள் கருவிலேயே திரு. மாகா கிள்ளாடியாக இருக்கிறார்கள். அழுது அழுதே காரியத்தை சாதித்து கொள்கிறார்கள்.

     சில பிள்ளைகள் சாப்பாடு நேரம் போக மற்ற நேரங்கலில் அழுதால், வேறு சில பிரச்சனையாக கூட இருக்கலாம். அது என்ன என்று பார்க்க வேண்டும்.

        சிலர், பிள்ளை அழுதாலே, அது பசிதான் என்று பாலை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். இது பல சமயத்தில் கெட்டதாக போய்விடும். பிள்ளைக்கும் கெடுதி.தாய்க்கும் அதிகமாக பால் சுரந்து பால் கட்டிக்கொள்ளும்பிள்ளைக்கும் செரிமான பிரச்சனை,மற்றும் வேறு மாதிரி பிரச்சனைகள் வரலாம்.

        சிலர் தாய்பால், சிலர் டின் பால்,சிலர் இரண்டும் கலந்து. எப்படியோ டாக்டர் சொல்படி கொடுத்து விட்டு போங்கள். ஆனால் நேரத்துக்கு நேரம் கொடுங்கள். அதுதான் உடம்புக்கு நல்லது.


 ஒரு அட்டவணை இருக்கிறது.

தாய்பால் என்றால்  20-30  நிமிடகளாவது கொடுக்க வேண்டும்.

0 -3 மாதம் வரை
06A .M to 7A.M      பால் -  தூக்கம்

09A.M to 10A.M    குளியல்  - பால்   -  தூக்கம்

12P.M to 1P.M       பால்  -  தூக்கம்

15P.M to 16h30     பால்- தூக்கம் - walking

18P.M to 19P.M    பால்தூக்கம்

21P.M to 22P.M    பால் தூக்கம்

     தினமும் வாகிங் போகமால் பிள்ளையும், அம்மாவும் சும்மாவே வீட்டிலேயே அடைந்திருப்பது நல்லது கிடையாது.

       பிள்ளைப்பெற்றிருப்பது என்பது ஒரு பெரிய நோய் கிடையாது. ஒரு வரம். வெளி காற்று பட்டால் நல்லது.

      3 மாதம் உள்ளேயே இருந்து விட்டு திடீர் என்று வெளியே வந்தால் அப்பொழுது நோய் அதிகம் வரும்.

    எப்பொழுதும் குழந்தையை வெளியே அழைத்து செல்ல ஒரு பை தயாராக இருக்க வேண்டும். அதில் பிள்ளைக்கு தேவையான couche,feeding bootle, coton, பழைய துணி, சிறிய டவல், சட்டை, சிறிய கரண்டிகள், டம்ளர்,பால் டின்,bavette, இப்படி தயாராக இருந்தால், கடைசி நேரத்தில் feeding bottle  லை மட்டும் கழுவி எடுத்துக்கொண்டு போய்விடாலாம்.எவ்வளவு அவசரம் என்றாலும் இது உதவும்.

   நான் சுடத்தண்ணீர்தான் எடுத்து செல்வேன். பாலை அவ்வப்போது கலந்து கொடுப்பேன். சுட தண்ணீர், பாட்டில் கழுவவும் உதவும். பாலாக எடுத்து சென்றால் ஒருமாதிரி நாற்றம் கொடுக்கும். பிள்ளை குடிக்காது.


இன்னும் வரும்.

copyright© Jan 2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts