ஆரஞ்சு தோலில் சாக்லெட்/Orangettes

ஆரஞ்சு தோலில் சாக்லெட்/Orangettes
2.ஆஞ்சு தோலில் சாக்லெட்/Orangettes
தேவைப்படுவது
150 கிராம் சர்க்கரை பாகில் ஊறிய ஆரஞ்சு தோல்
200 கிராம் டார்க் சாக்லெட்
வேண்டும் என்றால் ஒரு சிட்டிக்கை ஜாதிக்காய்,பட்டை தூள் போட்டுக்கொள்ளலாம்.
3 மேஜைக்கரண்டி ஐசிங் ஷுகர்
செய்யலாம் வாங்க
1)ஆரஞ்சு தோலை ஐசிங் ஷுகரில் புரட்டவும். அப்பொழுதுதான் தனித்தனியாக ஒன்றொடு ஒன்று ஒட்டாமல் இருக்கும். அதனை அப்படியே வைத்து விடவும்.
2) பட்டர் பேப்பரை ஒரு தட்டில் போட்டு ரெடியாக வைக்கவும்.
சாக்லெட்டைடபுள் பயிலர் முறையில் உருக்கவும். சாக்லெட் முழுதும் உருக்கியவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
3)ஆரஞ்சு தோலை ஒவ்வொன்றாக எடுத்து உருக்கிய சாக்லெட்டில் தோய்த்து எடுக்கவும்ரெடியாக பட்டர் பேப்பர் போட்டு வைத்து இருக்கும் தட்டில் சாக்லெட் தோய்த்த ஆரஞ்சுதோலை வைக்கவும்
4)குளிர் நாடாக இருந்தால்,உங்கள் வீட்டு ஜன்னலை திறந்து வைத்தாலே கொஞ்ச நேரத்தில் காய்ந்து விடும்.
5)வெய்யில் நாடாக இருந்தால் உங்கள் குளிர்சாதனபெட்டிக்குள் வைக்கவும்.
   இப்பொழுது சாக்லெட் தாயார் சாப்பிடுங்கள்.
டார்க் சாக்லெட் பிடிக்கவில்லை என்றால்,மில்க் சாக்லெடில் கூட செய்யலாம். உங்கள் இஷ்டம். செய்து சாப்பிடுங்கள் .நல்ல இருக்கும்.

இது தட்டில் உள்ள சாக்லெட்டில் 2 ஆம் ண்ணில் உள்ளது



copyright©Jan2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts