தாய்மை அனுபம் 6

     
குழந்தை பெற்ற பெண்கள்களுக்கும் நான் சொன்ன அட்டவணைப்படி நடந்தால் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும்.

      இரவு கண் விழிக்கும் வேளை சீக்கிரமே ஒரு தீர்வு கிடைக்கும்.. அம்மா அல்லது துணைக்கு யாரும் இல்லாத என்னை போல தனி ஆட்கள் என்ன செய்வது? அதுவும் இல்லாமல், இதுவும் டாக்டர் சொல்படி வளர்ததுதான்.

     அடுத்து பிள்ளை பெற்ற பெண்கள் உணவு முறைக்கு வந்தால், இது நாட்டுக்கு நாடு மாறுப்படும். பிரான்ஸை பொறுத்த வரை தாய்ப்பால் கொடுப்பவர்கள், நிறைய பால் சம்மந்தப்பட்ட உணவுவகைகளை சாப்பிட வேண்டும்.சீஸ்,பால்,தயிர், எல்லாம். மீன்கள்,மொத்ததில் இங்கு பத்தியம் கிடையாது.சாப்பிடக்கூடாது என்றால் பூண்டு,கோஸ் வகைகள் தான்.இதனை சாப்பிட்டால் தாய்ப்பால் பிள்ளைக்கு பிடிக்காமல் போய்விடும் என்கிறார்கள்.

      எனக்கு பிள்ளை பிறந்த 15 நாளில் பாரிஸிலிருந்து ரோஜா அம்மாச்சி(அம்மாவின் சின்னம்மா)வந்தார்கள். ஒரு வாரம் என்னுடன் தங்கிவிட்டு சென்றார்கள். மிகவும் ஜாலியாக இருந்தது. அவர்கள் இப்பொழுது உயிரோடு இல்லை. இதில் அவர்கள் கொடுத்த ரெசிபிகளை இங்கு கொடுக்கிறேன்., எனக்கு வேறு பிள்ளை பெற்ற பத்திய சாப்பாடு ரெசிபி தெரியாது.

       உங்களில் யாருக்காவது பத்திய குழம்பு ரெசிபி தெரிந்தால் எனக்கு எழுதவும். என்னைப்போல யாராவது இருந்தால் இன்னும் விதவிதமாக செய்து சாப்பிட வசதியாக இருக்கும்.

     நான் இந்திய சாப்பாடு மிகவும் கிடையாது. எப்பொழுதாவது ஒருமுறைதான். பெருமை அடித்து கொள்கிறேன் என்று நினைக்கிறீர்களாஉண்மையில் கிடையாது.

     இந்திய சாப்பாடு சாப்பிட பயம் தான். நான் இருக்கும் ஊரில்தான் இந்தியர் கிடையாது என்று சொல்லியிருந்தேனே. இந்திய டாக்டர் மட்டும் எங்கே???

     நமக்கு எதாவது நோய் வந்து விட்டால் நாம் சாப்பாட்டு ரெசிபியே சொல்ல வேண்டும். அப்படியும் பல கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறேன்

    அது என்னை போல அனுபவப்பட்டவருகளுக்கு நன்றாக புரியும். அதானால்,நான் இந்த நாட்டு சாப்பாட்டுக்கு மாறிவிட்டேன். ஏதாவது  நோய் வந்தால் கூட விளக்குவது சுலபம் பாருங்கள்.

     ரோஜா அம்மாச்சி எனக்கு கொடுத்த ரெசிபியை உங்களுக்கு கொடுகிறேன். அவர்கள்தான் இல்லை. அவர்கள் நினைவாக இதனை சமர்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.

 ரோஜா அம்மாச்சி பத்திய குழம்பு தூள்

  • மாகாணி        கொத்தல்லிதூள்
  • 1 மேஜைக்கரண்டி  மிளகுத்தூள்
  • 1 மேஜைக்கரண்டி  மஞ்சள்தூள்
  • 1 மேஜைக்கரண்டி  சீரகத்தூள்
  • 1 மேஜைக்கரண்டி  பெருஞ்சீரகத்தூள்
  • 1 மேஜைக்கரண்டி  மிளக்காய்த்தூள்
எல்லாவற்றையும் நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.

      மீன் குழம்பு,கத்தரிக்காய் குழம்பு என்று புளிக்குழம்புவைக்கிறீர்கள் அல்லவா? அப்படி வைக்கும் பொழுது  நிறைய பூண்டு வதக்கி போட்டு இந்த தூளை உபயோகப்படுத்தவும்.

தொடர்ந்து எழுதுவேன்.

copyright© Jan 2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts