கரமல் ப்ரட்/Pain perdu


 இதற்க்கு தேவை  என்று  பெரியதாக ஒன்றும் இல்லை

திடீர் விருந்தினரை சமாளிக்கலாம். பிள்ளைக்களுக்கும் சத்துள்ள உணவு.

கால்சியம், புரதம், எல்லாமே உள்ளது. இனிப்பாக உள்ளதால் சாப்பிட வைக்க பாடாத பாடு நமக்கு இல்லை. செய்வதும் சுலபம். வீட்டில் இருக்கும்

பொருட்களை வைத்தே செய்து விடலாம். அதிலும். வீணாக
போய்விட்டதே என்று நினைக்கும் பொருளில் செய்து விடலாம்.

 10 நிமிடத்தில் முடிந்து விடும்.

ரொட்டி வாங்கி காய்ந்து விட்டது என்று கவலைப்படுக்கிறீர்களா? அந்த கவலை இனி இல்லை ஜோசியம் சொல்லிவிட்டேன். இனி வருவதை படிங்க,நல்லது நடக்குங்க.

எது எது வேண்டும்?
  • ரொட்டி துண்டுகள் 10
  • பால்   200- 250 மில்லி
  • முட்டை  2
  • சர்க்கரை  100 - 200 கிராம்
  • வெண்ணெய் 100 கிராம்
  • வேண்டுமென்றால் எண்ணெயும் கலந்துக்கொள்ளலாம்.


இப்போ செஞ்சுடலாமா?

1)முட்டையை அடிச்சு ஒரு தட்டுல வைச்சுக்கங்க

2)பால் ஒரு தட்டுல வையுங்க

3)சர்க்கரைய் ஒரு தட்டுல வையுங்க

4)ஒரு தோசைக்கல்லை அடுப்புல வைச்சு வெண்ணெயைப் போட்டு,
 உருகும்

 5)அதுக்குள்,
 ரொட்டி இருக்கு இல்லையா? அதை முதலில் பாலில் லேசாக இரண்டு பக்கமும் போட்டு எடுங்க.




6)அப்புறம் முட்டையில் அதுமாதிரியே இரண்டு பக்கமும் போட்டு எடுங்க.




7)அப்புறம் சர்க்கரையில் இரண்டு பக்கமும் போட்டு எடுத்த பிறகு ,




8)தோசைக்கல்லில் போடுங்க. இரண்டு பக்கமும் சிவந்து வரும்
சிவந்தவுடன்  எடுத்து சாப்பிடுங்க.

 காய்ந்த ரொட்டியா? இது என்பீர்கள்.

  நல்ல ரொட்டியில் கூட செய்யலாம்.

கலோரி  138
சர்க்கரை  20
புரதம்    3,92
கொழுப்பு 4,64

copyright© Jan 2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts