சாக்லெட் ஆல்மெட் கேக்


Le choco amandine


தேவையானவைகள் :


  • 200 கிராம் கருப்பு சாக்லெட்
  • 125 கிராம் வெண்ணெய்(Room temperature)
  • 150 கிராம் சர்க்கரை
  • 50   கிராம் மைதா
  • 1/4  தேக்கரண்டி பேக்கிங் பௌடர்
  • 80   கிராம் ஆல்மெட்(பாதாம்) பௌடர்
  • 4      முட்டை


செய்முறை :

1. முட்டையின் வெள்ளைகரு மஞ்சள்கரு பிரித்துக்கொள்ளவும்.

2. சாக்லெட்டைஉருக்கிஅதனுடன் வெண்ணெய்யை கலக்கவும்.

 பிறகு, மைதா,பேக்கிங் பௌடர், பாதாம் பௌடர் கலக்கவும்.



3.முட்டையின் வெள்ளைகருவை நுரை பொங்கஅடிக்கவும்.




4.மஞ்சள்கரு,சர்க்கரையை நன்றாகஅடிக்கவும். கலர் மாறவேண்டும்.





5.இப்பொழுது, சாக்லெட் கலவையுடன்  மஞ்சள்கரு கலவையை சேர்க்கவேண்டும்.

பிறகு,நுரை பொங்கஅடித்து வைத்து இருக்கும் வெள்ளைகருவை சேர்க்கவேண்டும்.

6.நன்றாககலந்ததும், வெண்ணெய் தடவிய​ மோல்டில் ஊற்றி 20 - 25 நிமிடங்கள் 180°/th6 அவணில் வைத்து வேகவைக்கவும் .




10 - 15 நிமிடங்கள் கழித்து சாப்பிடலாம்.

copyright© Jan 2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts