தாய்மை அனுபவம் 9

     மருத்துவமனையில் பிரசவம் ஆகி இருக்கும் போது, பிறந்த பிள்ளைக்கு மட்டும் நிறைய இடம் கொடுத்து விட்டு பெரிய பிள்ளையை கவனிக்காமல் விட்டுவிடாதீர்கள்அவர்களுக்கும் இடம் கொடுங்கள். over ராகவும் வேண்டாம். அதன் பேர் செல்லம். அப்புறம். சின்ன பிள்ளையை தூக்கவே விடமாட்டார்கள்.

     வீட்டுக்கு வந்தும் தான் இருக்கிறது. பள்ளிக்கு செல்லும் பிள்ளை என்றாலும் விடுமுறை நாட்கள் இருக்கிறதே! எது எப்படி இருந்தலும், நீங்கள் செய்ய வேண்டியது காலையில் பெரிய பிள்ளை எழும் முன் எழுந்து பம்பரமாக வீட்டு வேலைகளை செய்து முடிந்து வைத்து விடவேண்டும்.

     சின்னக்குழந்தையை எந்த காரணத்தைக் கொண்டும்  பெரிய பிள்ளையிடம் தனியாக  விடவே கூடாது. அது ஆபத்தில் விடும். 

     சில சமயம் உங்கள் பெரிய பிள்ளை நிறைய சேக்ஷ்டைகள் வேண்டும் என்றே உங்கள் கவனத்தை திருப்ப செய்வர்கள். இது normal. 


    திட்டாதீர்கள்.அன்பாக திருத்துங்கள்.நேரம் இல்லை என்று சொல்லாதீர்கள். காலையில் வேலையை முடித்து விட்டால், நிறைய நேரம் இருக்கும். நேரத்தை பிள்ளைகளுடன் செலவிடுங்கள். அது மிகமிக முக்கியம். அவர்கள் நம்முடன் இருப்பது மிகமிக குறுக்கிய நாட்கள்தான். 
அதை மனதில் வையுங்கள் இதை நினைத்தாலே ,இப்பொழுதே என் கண்கள் கலங்குகிறது. பின்வரும் நாட்களில் எப்படி தங்கிக்கொள்ளப்போகிறேனோ !




      பிள்ளைக்கள் பூபோன்றவர்கள் மனதும் தான். அதனை ஏற்றம் 

இறக்கம் காட்டி வளர்க்காதீர்கள். பெண் என்றாலும், ஆண் என்றாலும் 

ஓரே மாதிரி வளருங்கள். ஓரே மாதிரி தானே சுமக்கிறோம். பிறகு 

மட்டும் ஏன் வேறுப்பாடு எதிர்காலத்தில்? 

     புரியவில்லை. ஒரு பெண்,இன்னொரு பெண்ணுக்கு எதிரியாய் இந்த புதுப்புதிர் விலங்கவில்லை. புரிந்தவர் இல்லையா? இருந்தால் விளக்கம் வருமா?

                                             மீண்டும் சந்திப்போம்
copyright© Jan 2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts