தாய்மை அனுபம் 7

 பத்திய கோழிக்கறி குழம்பு


இதுவும் அம்மாச்சி சொல்லிக்கொடுத்ததுதான்

வேண்டிய பொருட்கள்:
  • கோழிக்கறி    1/2 கிலோ
  • வெங்காயம்     2
  • பூண்டு        1 முழுசு
  • தக்காளி               1
  • பட்டை,இலை தாளிக்க
  • *பத்தியதூள்        3 டீஸ்பூன்
  • ஆலிவ் எண்ணெய்/நல்லெண்ணெய்   4 மேஜைக்கரண்டி

உருளைக்கிழங்கு வேண்டுமானால் போடலாம்.

இப்போ செய்யலாம்:
1)பூண்டை உரித்து வைத்துக்கொள்ளவும்.

2)வெங்காயம், தக்காளி அரிந்து வைத்துக்கொள்ளவும்.

தக்காளி வேண்டாம் என்று நினைத்தால் விட்டுவிடுங்கள்.மன ஒவ்வாம்மை பெரிய ஒவ்வாம்மை.

3)எண்ணெய் உற்றி பட்டை, இலை வெடிக்கவிடவும்.

4)வெங்காயம் போட்டு வதக்கவும்,பிறகு தக்காளி போட்டு வதக்கவும். சிவக்க வதக்கவும்.

5)பத்திய குழம்புத்தூள்,உப்பு,மஞ்சள் தூள் போடவும் லேசாக சிவக்க வைத்து, கறியை போட்டு தண்ணீர் உற்றி கறியை வேக வைக்கவும். கறி வெந்தும் இறக்கவும்.

இது சோறுடன் சாப்பிடலாம். இட்லியிடன் கூட நன்றாக இருக்கும்.

   எதுவும் மிகவும் சுடசுட சாப்பிடக்கூடாது என்று சொல்லுவார்கள்.
அதானல்,எது சாப்பிடாலும் மிதமான சூட்டில் சாப்பிடவும்.

சுடத்தண்ணீராக இருந்தால்,ஆரவைத்து குடிக்கவும்.

மீண்டும் சந்திப்போம்

copyright© Jan 2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts