Ragoût de poulet aux léugumes / கோழி ரகு காய்க்கறிகளுடன்

இந்த அளவு  4- 6 பேருக்கு

தேவைப்பட்டது
  • வெங்காயம் 2
  • கேரட்   5
  • உருளைக்கிழங்கு  4
  • குடைமிளக்காய் 2
  • கோழிக்கறி      3/4கிலோ
  • வெண்ணெய் 40 கிராம்
  • மைதா 20கிராம்
  • சிக்கன்ஸ்டாக்  3/4லிட்டர்
  • மிளக்காய் தூள் 1டீஸ்பூன்
  • உப்பு,மிளகுதூள்
  • தைம் இலை, பசலிக்


செய்ய தொடங்கலாம்:

1)வெங்காயத்தை வெட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

2)இந்த கேரட்,உருளைக்கிழங்கு,குடைமிளகாய்,கோழிக்கறி எல்லாத்தையும் வெட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

3)எல்லாம் ரெடியா ஆனதும்,
ஒரு கசரோலை அடுப்பில் வைத்து,காய்ந்ததும் வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போடவும்.


நன்றாக சிவக்கவிடவும்.

4)நன்றாக சிவந்ததும்,கேரட்டை போடவும். லேசாக கொஞ்சமாக சிக்கன் ஸ்டாக்கை ஊற்றவும்.
 5 நிமிடம் வேகவிடவும்.

பிறகு,உருளைகிழங்கை போட்டு கிளறி விடவும்,

5)மைதாவை தூவியது போல் போடவும் நன்றாகக்கிண்டி விடவும்.1நிமிடம் அப்படியே விடவும்.


இப்போது சிக்கன் ஸ்டாக்கை ஊற்றவும். தைம் இலை, பசலிக் போடவும்.
மிளக்காய்தூள்,உப்பு,மிளகு போட்டு கிளறி விட்டு

6)கறியையும் பிழிந்து போடவும்.சிறு தீயில் வேக விடவும்.


கறி பாதி வேகும்போது குடை மிளக்காயை போடவும்.

வெந்தும் மக்ரோனி போன்றவைகளுடனும் சாப்பிடலாம்.சோறுடனும் சாப்பிடலாம்.ப்பூரேயுடனும் சாப்பிடலாம்.

  • கலோரி  403
  • சர்க்கரை 15 கிராம்
  • புரோடின்  58 கிராம்
copyright© Jan 2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts