உண்மையான சாக்லெட் பானம்/Le vrai chocolat chaud

இது அநேகமாக மெக்ஸிகன் பானமாக இருக்கலாம். இங்கு நான் கொடுத்து இருப்பது  French முறைப்படி. குளிர்காலத்தில் இதனை குடிப்பது தனி சுகம். குழந்தைகள் விரும்பி குடிக்கும் பானம்.

6-7 பேர்களுக்கு..
தேவை இதுவே:
  • 150 -200 கிராம் டார்க் சாக்லெட்
  • 200 மில்லி லிக்வீட் கிரீம்
  • 1மேஜைக்கரண்டி வனிலா
  • 3/4 லிட்டர் பால்
  • சர்க்கரை தேவையான அளவு

செய்யலாம்:
1)டார்க் சாக்லெடை உடைத்து வைத்துக்கொள்ளவும்.
2)டாரக் சாக்லெட், லிக்வீட் கிரீம், பால்,வனிலா,சர்க்கரை எல்லாவற்றையும் ஒரு கசரோலில் போட்டு சாக்லெட் கரையும் வரையில் நன்றாக சிறு தீயில் ஒரு மரக்கரண்டியால் அடிப்பிடிகாமல் கிண்டிக்கொண்டே இருக்கவும்.
3)சாக்லெட் கரைந்து நன்றாக வாசனை வந்ததும் நிறுத்தவும்.
4)வடிக்கட்டி குடிங்க.
வடிக்கட்டின அந்த சாக்லெட் திப்பியை தூக்கி போடாதீங்க.அதை பிரட் கூட சாப்பிடலாம்.
இதனை ஒரு முறை குடித்து விட்டால்,பிறகு  இதுதான் விரும்பி கேட்பார்கள்.
தினம் இல்லை என்றாலும் ஞாயிற்றுக்கிழையில், முட்டை ஆம்லெட் அல்லது  soft boiled egg/ œuf à la coque,இந்த சாக்லெட் பானம்,சூடான ரொட்டி/toast/grillé ம்ம்  நல்ல இருக்கும்.


பிடிக்கும் என்றால் கொஞ்சம் பட்டை தூள் கூட சேர்க்கலாம்.
சாப்பிட்டு,குடிச்சு Enjoy பண்ணுங்கு.

copyright© Jan 2014kolly2wood.blogspot.com

Comments