கராம்மல் ஆப்பிள் /Pomme au four


இது மிகவும் சுலமான முறை. பிள்ளைகளுடன் செய்யலாம்.3,4 வயது பிள்ளைகளுடன் கூட செய்யலாம்.

இதற்க்கு தேவையான பொருட்கள்:
  • ஆப்பிள்
  • வெண்ணெய்
  • சர்க்கரை
  • பட்டை


செய்ய தேவையான உபகரணங்கள்:
  • அவண்
  • அவணில் வைக்கும் தட்டு
  • கத்தி
  • சின்ன கரண்டி

 செய்யலாம்:
1)அவணை முற்சூடு 180° செய்துக்கொள்ளுங்கள்.

2)ஆப்பிள்ளைக்கழுவி நடு பகுதியை எடுத்து விடுங்கள்.


அவண் தட்டில் ஆப்பிள்ளை அடுக்கி வைத்து விடுங்கள்.

3)ஆப்பிளின் நடுப்பகுதியில் ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு வெண்ணெய் வைத்து விடுங்கள்.

4)பிறகு,ஒரு மேஜைக்கரண்டி சர்க்கரை போடுங்கள்.


5)பிடிக்கும் என்றால் பட்டை தூள் அல்லது முழுசாக வைக்கலாம்.

6)அவணில் இப்போது வைத்து விடுங்கள்.15-  20 நிமிடங்கள்தான்  இருக்க வேண்டும்

பார்த்துக்கொண்டே இருங்கள்.வெந்து ராமலாக வந்ததும் நிறுத்தி விடுங்கள். ரொம்போ வெடிக்க கூடாது

இதனை இப்படியேவும் சாப்பிடலாம்.க்ரேமுடனும் சாப்பிடலாம்.

ஆறியதும் சாப்பிடவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் dessert.
ஏன் நாம் கூடாதான்?????

copyright© Jan 2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts