Lentilles a la dijonnaise/கொள்ளு திழோன் ஸ்டைல்


தேவையான பொருட்கள்:
  • கொள்ளு  250- கிராம்
  • வெங்காயம் பெரியது என்றால் 1 +1
  • சிறியது என்றால் 2 +1
  • கேரட்      3
  • ஹம்/ham/jambon
  • அல்லது
  • பக்கோன் /bacon/lardon  100 கிராம்
  • அல்லது
  • கறி
  • பீப் ஸ்டாக்  1/4 லிட்டர்
  • ஆலிவ் எண்ணெய்
  • அல்லது       3 மேஜைக்கரண்டி
  • சூரியகாந்தி எண்ணெய்
  • மைதா  1மேஜைக்கரண்டி
  • மஸ்டர்ட் கிரீம்/hot mustard/moutarde forte 1 டீஸ்பூன்
  • கிராம்பு  4
  • புக்கேகர்னி
  • பார்சி
  • உப்பு,மிளகுத்தூள்


செய்து ரசியுங்கள்:

1)கொள்ளை கழுவிவைக்கவும்.

2)கேரட்டை தோல் சீவி வைக்கவும்.

3)வெங்காயத்தின் தோலை உரித்து வைக்கவும்.

4)1வெங்காயத்தை பொடியாக அரிந்து வைக்கவும்.

5)ஒரு பெரிய பாத்திரத்தில், கழுவின கொள்ளை போடவும்.நிறைய தண்ணீர் உற்றவும்.

6)வெங்காயதில் கிராம்பை குத்தவும்.கொள்ளிருக்கும் பாத்திரத்தில் போடவும்.
கேரட்டையும் அதிலேயே போடவும்.

7)1 மணி நேரம் வரை  வேக வைக்கவும்.

8)குக்கர் என்றால் சீக்கிராமாக வெந்துவிடும்.

9)எண்ணெய் காய வைத்து கறியை வதக்கி போடவும்.





10)அதே எண்ணெய்யில், அரிந்து வைத்த வெங்காயத்தை வதக்கி போடவும்.


11)வெங்காயம் வதங்கியவுடன் மைதாவை போட்டு  கிண்டி கொள்ளின் தண்ணீர் உற்றவும். ஒரு சேர வந்தவுடன், கொள்ளுடன் கொட்டி விடவும்.

12)கறியாக இருந்தால்,கொள்ளுடனே வேக வைக்கவும்.

13)ஹம்,பக்கோம் மாக இருந்தால்,இப்பொழுது போடலாம்.

14)5நிமிடம் சென்றதும்,கட்டியாக இருக்கும்.

15)மஸ்டர்ட் கிரீமை போட்டு கிண்டுங்கள்.

பார்சி இலையுடன் பரிமாறுங்கள்

copyright© Jan 2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts