வனிலா(Vanilla)வாசனை ஒரு பார்வை
வனிலா
என்றாலே நம் நினைவுக்கு வருவது
வனிலா ஐஸ்கீரிம்தான்.
இது தவிர நாம்
வனிலா எது எதுக்கு
உபயோகப்படுத்துகிறோம்??????
கேக்கிற்க்கு,சில
குடிக்கும் பானத்திற்க்கு.
என்
பிள்ளைகளுக்கு சாக்லெட்
பானம் என்றால் அதில் வனிலா
இருக்க வேண்டும்.
சாக்லெட்
பானத்திற்க்கு இது மிக
பொறுத்தமாக நறுமணம் கொடுக்கும்.
எனக்கு
எதுவுமே சும்மா சாப்பிட்டால்
மட்டும் பிடிக்காது.
அதன் வரலாறு
கேட்டு தெரிந்துக்கொள்வேன்.
நான்
நம்ம ஊருல இருந்தப்போ வனிலா
எஸன்ஸ் மட்டும் தான் பாட்டில
பார்த்து இருக்கிறேன்.
இங்க வந்தா...
எல்லா வீட்டிலும்
எஸன்ஸ் பாட்டில் எங்களுக்கு
பிடிக்காது வனிலா கூஸ்தான்
போடுவோம்னு சொன்னாங்க.
வனிலா
கூஸ்னுனா???? ஒன்னும்
புரியல எனக்கு.
எனக்கு பாட்டில
விட்டா வேற தெரியாது.
நீங்க
வேற, பாட்டில்
என்றதும் வேற ஏதோன்னு நெனச்சுக்க
போறீங்க. நான்
பொறந்த ஊரும் தண்ணீக்கு பஞ்சம்
இல்லை. வாக்கப்பட்ட
ஊரும் தண்ணீக்கு பஞ்சம் இல்லை.
தண்ணீன்ன
சரக்கத்தான்சொல்றேன்னு...... புரியலேன்ன, சரி.விடுங்க.
அப்புறம்
எடுத்து வந்து காட்டினார்கள்.
இதுதான் கூஸ்
த வனி என்று. அப்பத்தான்
நான் முதல் முதலாக வனிலா
இப்படித்தான் இருக்கும்
என்று பார்த்தேன்.
இன்ன
வாசனை............நல்லதான்
இருந்தது.வாசனை
மாதிரியே விலையும் நல்லா
இருந்த்து.
இதன்
பிறப்பிடம் மெக்ஸிக்கோ(Mexico).
அங்கு இதை
சாக்லெட் பானத்திற்க்கு
நறுமணமூட்ட உபயோகப்படுத்தியதாக
கூறப்படுகிறது.
பிறகு
16ஆம்
நூற்றாடில் ஐரோப்பாவிற்க்கு
வந்துள்ளது.
![]() |
வெனிலா பீன் கொடி |
முன்பு
மெக்ஸிக்கோவில் மட்டுமே
பயிரிடப்பட்ட வனிலா,
இப்பொழுது
பிரிஞ்சு ஆதிக்கதின் கீழ்வுள்ள ,மடகாஸ்கார்(Madagascar) ரெயூனியுன்(Réunion),
கொமோரோ(Comoro) தீவுகளில்
பயிரிடப்படுகிறது.
இன்னும் பல இடங்களில் பயரிடப்படுகிறது.
![]() |
வெனிலா பீன் |
மடகாஸ்காரில்
மெஸ்கோவை விட உற்பத்தி அளவு
அதிகமாக உள்ளது.இருந்தாலும்
மெக்ஸிகோ நாட்டு வனிலாத்தான்
மதிப்பு மிக்கது இன்றுவரை.
அதுதானே தாயகம்
வனிலாவுக்கு என்னயிருந்தாலும்.
நாம்
உபயோகப்படுத்தும் வனிலா
எஸன்ஸ் முழுதும் செயற்க்கைதான்.
ஆங்கிலதில்
வனிலா பீன்(vanilla
bean) என்று
சொல்லுவார்கள்.
பிரஞ்சில்
கூஸ் த வனி(Gousse
de vanille) என்று
சொல்லுவார்கள்.
குங்குமப்பூவிற்க்கு பிறகு வனிலாத்தான் விலை உயர்ந்த நறுமணப்பொருள்.
நான்
இந்த கூஸ் த வனியை வைத்து
சர்க்கரையையும்.
எஸன்ஸ்சும்
செய்வேன்.
அதனை
நாளை உங்களுக்கு சொல்லி
தருகிறேன்.
copyrightJun2014©kolly2wood.blogspot.com
Comments
Post a Comment