விழா...டிப்ஸ்









விழா....கொண்டாட்டம்...மகிழ்ச்சி....ஆச்சிரியம்.....


      நம்ம வீட்டில் நடப்பது அடிக்கடி நடப்பதுதான் விழாகள். அது திருமண விழாவாக இருக்கலாம். பிறந்தநாளாக இருக்கலாம்.திருமணநாள் விழாவாக  இருக்கலாம். புதுமனை புகுவிழாவாக இருக்கலாம். இப்படி பல விழாகள் நம் வீட்டில் நடக்கிறது.


       இதை எப்படி கொண்ட்டாடுவது?சில சமயம் நமக்கு முதல் முதலில் ஒரு விழா செய்வது ஒரு பயம். அந்த பயம்தான் செய்ய தெரியாது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.

       எனக்கு விழா கொண்டாடும் அனுபவம்,நான் திருமணம் ஆனதும் இங்கு வந்த 3 மாததிலிருந்து தொடங்கியது.

      இங்கு இருக்கும் வெள்ளைக்கார நண்பர்கள் அனைவரும் எங்களுக்கு ஒருநாள் விருந்து கொடுத்தார்கள். அதற்க்கு நன்றிக்கூற நாங்கள் விருந்துக்கொடுக்க முடிவு செய்தோம்.

       ஏறக்குறைய 40 பேருக்கு மேல் வந்தார்கள்.எல்லோரும் இந்திய சாப்பாடு சாப்பிட ஆசைப்பட்டார்கள். அதுதான் எல்லாருக்குமே முதல் முறை. அவர்களுக்கு இந்திய சாப்பாடு சாப்பிடுவது. எனக்கு விழா தனியாக 
கொண்டாடுவது.
தனியாக எல்லாமே நானே செய்ய வேண்டியாதாகி இருந்தது.

      அது முதல் அனுபவம். அது வேறு மாதிரி. எதுவும் தெரியாது.ஒரு திட்டம் இல்லாமல் செய்தோம்.

      என் கணவருக்கு 50 வயது பிறந்தநாள் விழாவை   surprise சாக கொண்டாட வேண்டும் என்று நானும் என் பிள்ளைகளும் நினைத்தோம்.

      இது கண்டிப்பாக திட்டம் தீட்டித்தான் செய்தோம். இப்போ இத்தனை வருட குடும்ப வாழ்க்கையில் இதுக்கூட தெரியவில்லை என்றால் நம்ம கவுருத என்னவரது?

      முதலில் ஒரு நோட் எடுத்துக்கொண்டேன். என்ன என்ன செய்ய போகிறோம்? என்று எழுத. எனக்கு எதையும் எழுதினால் தான் மறந்து போகாது. திடீர் என்று ஏதாவது இரவில் நினைவுக்கு வந்தாலும் உடனே எழுந்து எழுதலாம்.

      இப்போ நான் இருக்கும் நிலைமைக்கும் இதுமாதிரி எழுதி வைப்பதுதான் நல்லது.

அழைக்கும் நபர்கள்:

      முதலில் நண்பர்கள் எல்லாம் நாங்கள் தேர்ந்து எடுத்த நாளில்
வேறு ரந்தே வுக்கு(Rendez-vous) போய் விடக்கூடாது என்று எல்லாருக்கும் ரகசியமாக போன் செய்து தகவல் சொல்லி விட்டேன். அவர்களும் எல்லாரும் வருவதாக சொல்லிவிட்டார்கள்.

 முதலில் யார் யாரை கூப்பிடுவதுநண்பர்கள் மட்டும் போதும் 
என்று முடிவு செய்தோம்.நண்பர்களில் சிலர் மட்டுமே தேர்வு செய்தோம்அதுவே
 25 - 30 பேர்களுக்கு வந்தது.

இடம்:
      சரி வீட்டில் செய்ய முடியாது. ஏதாவது ஒரு இடத்தில் செய்யலாம். என்று முடிவு எடுத்தோம்.

      
     ஒரு இடத்தை பிடித்தோம்.அது பிள்ளைகளுக்கு விளையாட ஏற்ற இடமாகவும் இருக்க வேண்டும். வெயில் நாட்களாக இருந்தால் எல்லோரும் வெளியே போய் உலாவும் இடமாகவும் இருக்க வேண்டும். அது அப்படியே இருந்தது.


நேரம்:
      மதியமா? இரவா என்று பார்த்ததில் மதியானம் சரி என்று பட்டது.

      ஏதாவது   Theme  எடுத்துக்கொண்டால் நல்லதாகப்பட்டது. எதை எடுத்துக்கொள்ளலாம் என்று யோசித்தோம்.

      என் கணவர் பல நாட்டு காசு,பேனா எல்லாம் சேர்ப்பார்.
அதனால் ஏதாவது ஒன்று அது மாதிரி ஒன்று செய்யலாம் என்று நினைத்தோம்.

     கடைசியாக உலகசுற்றுலா என்று  theme   வைத்துக்கொண்டோம்.
ஒரு வழியாக  theme   கிடைத்து விட்டது


 தேவையானவை:
  
மேஜைக்கு போடும் விரிப்பு தாள் 3 ரோல்.
யூஸ் அன்ட் த்ரோ தட்டு, முள் கரண்டி,கத்தி,கரண்டி,காபி கலக்கும் கரண்டி எல்லாம் தலா 3 டஜன்
தண்ணீருக்கான டம்பளர் 100.
காபிக்கான டம்பளர்  50 .

கை துடைக்கும் சர்வியத் டாலர்,யீரோ மாதிரியே இருந்தது அது 50.
சாதாரண சர்வியத் 50.





பரிமாற பெரிய தட்டுகள், பவுல்,கரண்டிகள்,கத்திகள்,
உப்பு,மிளகுத்தூள்,
சாஸ்கள்,
அடுப்பில் வைக்க சில ஏனம்
அவணில் வைக்க ஏனம்.

      ஒரு பெரிய தாளில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று எழுதினோம். இது என் நண்பர் ஒருவர் செய்தார்.

       எழுத்திலேயே எல்லாவிதமான வாகனங்களும் இருந்தன. கப்பல்,புகைவண்டி,விமானம்...... என்று.

       சின்ன பிள்ளைகள் வரும் என்றால் அவர்களுக்கு தகுந்த மாதிரி கலர் செய்யும் விளையாட்டு கலர் பென்சில், வெளியே விளையாடும் விளையாட்டுகள்.

      சாப்பிட்டு முடித்து விட்டு நாமும் விளையாடுவதாய் இருந்தால் விளையாடலாம். அதற்க்கு விளையாட்டு.

       யார் யாருக்கு என்ன என்ன உடை உடுத்த போகிறோம் என்று முன்பே ஏற்பாடு செய்து விடவேண்டும்.


அடுத்தது,சாப்பாடு என்ன செய்வது?

       எல்லா கண்டதிலிருந்தும் எனக்கு தெரிந்த சில நாட்டு உணவு வகைகளை செய்வது என்று முடிவு செய்தோம்.

      எதை எதை செய்ய வேண்டும் என்ற உணவு ரெசிபிக்களை எல்லாம் நோட்டில் எழுதிக்கொண்டேன்.

      எல்லாமே Buffet system தான். ஜூஸ் வகைகள், வத்தல் வகைகள்,சிப்ஸ் வகைகள்.

சீஸ் வகைகள் சிலவற்றை தேர்ந்து எடுத்தோம்.

கேக் வகைகள்,இனிப்பு வகைகள் சிலவற்றை தேர்ந்து எடுத்தோம்.

பழவகைளும்தான்.

 30 பேருக்கு:
அது வெயில் நாள் ஆகையால் நாங்கள்
1லிட்டர் தண்ணீர் பாட்டில் ஒருவருக்கு 1 என்று வாங்கினோம்.
ஜூஸ் பாட்டில்கள்:
ஆரஞ்சு 2 லிட்டர் 5,
ஆப்பிள் 2 லிட்டர் 5,
அன்னாசி 1லிட்டர் 1,
எல்லா பழமும் கலந்தது 2 லிட்டர் 2
கொய்யா 1 லிட்டர் 2
 கோக்கா 2 லிட்டர்

இது இல்லாமல்   syrupப்பும்  வாங்கி வைத்துக்கொண்டேன்.

500 கிராம் சிப்ஸ் பாக்கெட் 4 பேருக்கு என்று வாங்க வேண்டும்.
மீதி கொறிக்கும் ஐட்டங்கள் அத்தனையும் 8 பேருக்கு 500 கிராம் என்று வாங்கினால் போதும்
இல்லை என்றால் சாப்பிடுவது கஷ்டம்.
கொறிக்கும் ஐட்டம் 5 - 6 விதம் இருந்தால் போதும்.
சிப்ஸ், வத்தல் 2 வகை,வேர்கடலை,மிக்சர்,பிஸ்தா.




ஸ்டாட்டருக்கு வருவோம். அதற்க்கு சல்லாத் ஒரு 4 - 5 வகைகள். சுலபமானதாக தேர்ந்து எடுத்துக்கொண்டேன். மக்கரோனியில்,சோற்றில்,சல்லாது இலையில்,தக்காளிதபுலே. இது எல்லாம் ஒரு ஒரு பெரிய பவுல் தான்

    ஷூஷி,மக்கி, சின்ன சின்ன டோஸ்ட்கள்………




அடுத்தது சூடானா ஐட்டங்கள். கீஷ், பீஸ்ஸா, ச்சையோ,
கோர்ன் டாக்,எலுமிச்ச சோறு, தந்தூரி சிக்கன்,.........

அடுத்தது சீஸ் வகைகள். இது அப்படியே வாங்கியதுதான். 6 - 7 வகைகள் இருந்தால் போதும். யாக்ரூட் 12 இருக்க வேண்டும்.

அடுத்தது,கேக் இதற்க்கு என் பெண் 50 என்ற எண் போன்ற கேக் செய்து இருந்தது. பிறகு தார்த்கள்,மற்ற கேக் வகைகள், மரோகோ,அல்ழேரியா நாட்டு இனிப்பு வகைகள் செய்து இருந்தேன்.

பழ வகைகள் இருந்தது

       மிட்டாய் வகைகள்.இது பிள்ளைகளுக்குதான் பிடிக்கும் என்று பார்த்தால், பெரியவர்களும் போட்டி போடுகிறார்கள்.



      
கடைசியாக காபி,டீ,திஸான்.

இதற்க்கு,
காபி 1 பாக்கெட்
டீ பேக் 2 பாக்கெட்,
திஸான் 3 விதங்கள்
சர்க்கரை 1 பாக்கெட். கட்டிசர்க்கரை என்றால் நல்லது.
இல்லை என்றால்.தூள் சர்க்கரையை ஒரு டப்பாவில் போட்டு ஒரு கரண்டியையும் போடவும்.

       இவை எல்லாம் 3 மாதக்காலங்களாக ஏற்பாடு செய்ய தொடங்கினோம்.

       ஒவ்வொன்றும் என் கணவருக்கு தெரியாமல் செய்ய நாங்கள் பட்ட பாடு எங்களுக்குதான் தெரியும்.

       எங்களுக்கு எங்கள் நண்பர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்தார்கள்.
எல்லாமே வீட்டில் செய்து விட்டேன்.

      சில என் கணவருக்கு தெரிந்து செய்தேன். சில தெரியாமல் செய்தேன். தெரிந்து செய்யும் போது அவரிடம் நாங்கள் சொன்ன பொய் - எங்கள் நண்பர் ஒருவருக்கு பிறந்தநாள் 60 வயது கொண்டாடுகிறார்கள் என்று. அதனால், என் கணவர் அவருக்கு என்று தெரியாமல் அவருக்கே அவர் ஒத்துழைத்தார்.
கடைசியில் அவரை ஒரு நண்பருடன் வந்தார். நாங்கள் விழா ஏற்பாடு செய்த இடத்தின் உள்ளே வந்ததும் தான் உண்மை தெரிந்தது.

       விழா மிகவும் நன்றாக அமைந்தது.

       என்னுடன் நீங்களும் கொஞ்சம் பிறந்தநாள் விழா கொண்ட்டாடினீர்களா?

      உங்களுக்கும் டிப்ஸ் கிடைத்ததா?

       இப்படித்தாங்க எல்லாம் கத்துகறது. ஆனா, ஒரு கஷ்டம் தெரியுமா? எனக்கு பரிமாற தெரியாது. நல்ல வேலை நம்ம ஊரில் நான் இல்லை. இது எனக்கு ஒரு ப்ளஸ் பயின்ட். நான் எல்லாவற்றையும் ஆக்கி வைத்துவிடுவேன். என் வீட்டுக்கு வரும் விருந்தினரை   self service  என்று சொல்லி விடுவேன்.
அல்லது எனக்கு பரிமாற தெரியாது என்று சொல்லிவிட்டு, அவர்களையே பரிமாற சொல்லுவேன்.


       என் வீட்டிர்க்கு வருபவர்கள் அதனால், அவர்களாகவே பரிமாற தொடங்கி விடுவார்கள்.


       இது எப்படி இருக்கு? எல்லாம் நாம் பழகுவதில் தான் இருக்கிறது.

copyright©jun2014 Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts