வனிலா சர்க்கரை





     நேத்தே உங்களுக்கு சொன்னேன் வனிலா சர்க்கரையும்,எஸன்ஸுசும் சொல்லித்தருகிறேன் என்று.


     இன்னைக்கு உங்களுக்கு நான் சொல்லித்தரப்போவது வனிலா சர்க்கரை எப்படி செய்வது என்று.

     வனிலா சர்க்கரை வாங்கினால் நிறைய விலை.நாமே வீட்டில் செய்தால் அது குறைந்த விலையில் நிறைய கிடைக்கிறது.

     இந்த சர்க்கரை எனக்கு தினசரி உபயோகம் ஆகிறது. யாக்ரூட்டில் போட்டு சாப்பிட,புரூட் சால்ட்டில் போட்டு சாப்பிட,கேக்கில் போட,காபி,பால் இப்படி பலவற்றிற்க்கு நான் உபயோக படுத்துவதால் எனக்கு சீக்கீரமாக செலவழிந்து போகும்.

     அதனால், எனக்கு இப்படி செய்து வைப்பதுதான் லாபம்.

வனிலா சர்க்கரை:
  • சர்க்கரை 1 கிலோ
  • வனிலா பீன் 4 அல்லது 5
  • ஒரு பாட்டில் இருக்கமாக மூடக்கூடியது.





1)வனிலா பீனை நீள வாக்கில் அரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

2)சர்க்கரையை பாதி பாட்டில் நிரப்புங்கள். வனிலா பீனை போடுங்கள்.

3)மீண்டும் சர்க்கரையை நிரப்புங்கள்.

4)வனிலா நன்றாக முழ்கி இருக்க வேண்டும்.

5)இறுக்கமாக மூடுங்கள்.

6)மூடி அப்படியே ஒரு மாதம் வைத்து விடுங்கள்.

7)நடுவில்,அதாவது ஒரு வாரம் கழித்து மூடியை திறக்காமல் சர்க்கரை பாட்டிலை குலுக்கி வையுங்கள். இப்படி நடுவில் நடுவில் செய்யுங்கள்.

8)1மாதம் கழித்து திறந்து பாருங்கள்

கமகமக்கும் வனிலா சர்க்கரை நீங்களே செய்து இருப்பீர்கள்.

கடையில் வாங்குவதை விட இதில் அதிகமாக வாசனை வரும்.

      
      செய்து பார்த்து விட்டு எப்படி இருந்தது என்று கண்டிப்பாக உங்கள் 

அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ளுங்கள்.



copyright©Jun2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts