Pudding Raispain/ புட்டிங் ரெஸ்ப்பேன்





     இது ஒரு பாட்டி காலத்து ரெசிப்பிங்க.

இந்த ஊரில காலங்காலம்மா செய்துக்கொண்டு வரும் ஒரு ரெசிபித்தான் இது.

எல்லா பிரஞ்சுக்காரர்களுக்கும் செய்யும் ஒரு உணவு இது.

இதுக்கு ஒண்ணும் நீங்க கடைக்கு போய் வாங்க வேண்டாம்

எல்லாம் வீட்டில் இருப்பதைக்கொண்டே செய்யல்லாம்.


வாங்க வாங்க செய்யலாம்:


  • பழைய ரொட்டி அல்லது பிரியோஷ்  300 கிராம்
  • முட்டை 4
  • பால் 1 லிட்டர்
  • சர்க்கரை 100 கிராம்
  • உலர்ந்த திராட்சை 100 கிராம்
  • வனிலா எஸன்ஸ் 1 டேபுள் ஸ்பூன்


1)பாலை முதலில் சூடாக்கி கொள்ளுங்கள்.



2)சூடான பாலை ரொட்டியில் ஊற்றி ஊற விடுங்கள்.



3)முட்டையை நன்றாக அடித்துக்கொள்ளுங்கள்.





4)ஊறிய ரொட்டியை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள்.

5)ரொட்டியுடன் சர்க்கரை,வனிலா, முட்டை எல்லாம் சேருங்கள்.




6)எல்லாம் கலந்ததும் உலர்ந்த திராட்சையும் இதனுடன் கலந்து விடவும்.




7)200° அவணை முற்சூடு செய்யவும்.

8)கலந்த கலவையை அவணில் வைக்கும் தட்டில் ஊற்றவும்.




9)முற்சூடு செய்த அவணில் 50 நிமிடங்கள் வைக்கவும்.

10)புட்டிங் நன்றாக உப்பி வரும்.

50 நிமிடங்களுக்கு பிறகு,புட்டிங் நடுவில் கத்தி ஏதாவது விட்டு 

பாருங்கள். ஒட்டாமல் வரவேண்டும்.

அப்படி வந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம்.

வெந்ததும் எடுத்து முற்றிலும் ஆறியதும் சாப்பிடவும்.


11)இது மீந்து போன ரொட்டியில் செய்தது என்று நீங்கள் சொன்னால்தான் 

தெரியும்

இல்லையென்றால் ரொட்டி என்றே தெரியாது.

copyright©Mai2014Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts