Tarte au citron meriguée/எலுமிச்சைப்பழ தார்த்





       என் மகனுக்கு இந்த மாதம் பள்ளிக்கூடம் கோடை விடுமுறை விடுவதற்க்கு முன்பு நிறைய விழாக்கள் செய்தார்கள்.

      இவனின் நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு உணவு பொருட்கள் எடுத்து வருவதாக ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். இங்கெல்லாம் இப்படித்தான் செய்வார்கள். ஓட்டலில் ஆர்டர் கொடுப்பது எல்லாம் கிடையாது. பெற்றோர் அதிகமாக காசு கொடுக்க மாட்டார்கள்.

      ஒரு மாத செலவுக்கு இவ்வளவு என்று கொடுத்தால் அதிலேயே அவர்கள்,தொலைபேசியிலிருந்து.....உடைவரை வாங்கி கொள்ள வேண்டும். சாப்பாடு மட்டும் போடுவார்கள்.


      16 வயதிலிருந்து சின்ன சின்ன வேலைகள் கோடை விடுமுறையில் செய்ய வேண்டும். இந்த வேலைதான் என்ற வரைமுறை இல்லை. மேயர் மகன் என்றாலும் தோட்ட வேலை செய்வான் காசுக்காக.

       சரி அந்த கதையை பிறகு சொல்லுகிறேன்.

       என் மகனை அவன் நண்பர்கள்  அனைவரும் நீதான் கேக் நல்ல செய்வாய். வழக்கம் போல் நீயே கேக் செய் என்று சொல்லி விட்டார்கள். இவனும் சரி என்று சொல்லிவிட்டு வந்து விட்டான்.

       இந்த முறை கேக் செய்ய மாட்டேன் எலுமிச்சைப்பழ தார்த் செய்ய போகிறேன் சொல்லிக்கொடுங்கள் என்றான்.

       அவனுக்கு சொல்லிக்கொடுத்தேன். அவனும் செய்து எடுத்து பள்ளிக்கு சென்றான். அவன் நண்பர்கள் அனைவருக்கும் பிடித்ததாம்.
அதைதான் உங்களுக்கும் சொல்லிதர போகிறேன்.

இதற்க்கு தேவையானது:






பில்லிங்/Filling
  • வெண்ணெய் 250 கிராம்
  • சர்க்கரை 150 கிராம்
  • சோள மாவு/corn flour 3 மேஜைக்கரண்டி
  • முட்டை 4
  • எலுமிச்சை தோல் துருவியது 1 மேஜைக்கரண்டி




செய்முறை:

1)எலுமிச்சைப்பழ சாறை பிழிந்துக்கொள்ளவும்.

2)ஒரு பவுலில் முட்டையையும், பிழிந்து வைத்துள்ள எலுமிச்ச சாறையும் நன்றாக கலக்கவும்.



3)கலந்தவுடன் இதிலேயே சர்க்கரையையும் போட்டு கலந்து அடுப்பில் வைத்து  சிறு தீயில் கிண்டவும்.




4)ஒரு கொதி வந்ததும். சோளமாவை கொஞ்சமாக பாலில் கரைத்து ஊற்றவும்.




5)நன்றாக சிறு தீயில் வைத்து கிண்டவும். கரண்டியில் இது ஒட்ட வேண்டும். தோசைமாவை விட தண்ணீராக இருக்க வேண்டும்.




6)அடுப்பை நிறுத்தி விட்டு  கிண்டிக்கொண்டே இருங்கள்.

7)பில்லிங்கை ஆறவிடுங்கள்.

8)பேஸ்டிரில் பில்லிங்கை ஊற்றுங்கள்.



9)170°முற்சூடு செய்த அவணில் வைக்கவும்.

10)25 - 30 நிமிடங்கள் வைக்கவும்.

11)வெளியில் எடுக்கவும்.

12)ஆறவிடவும்.




13)மிரங் செய்து வையுங்கள்.

16)ஆற வைத்துள்ள தார்த் மீது மிரங் கை வைக்கவும்.

17)அவணில் கிரில் சிறிது நேரம் வைத்து எடுக்கவும்.

18)கிரிலில் வைக்கும் போது அவண் லேசாக திறந்து வைத்திருக்க வேண்டும்.

*கருகி விடாமல் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.அவணின் அருகிலேயே இருக்க வேண்டும்.



எலுமிச்சை தார்த் மிரங் ரெடி.
 copyright©jun2014 Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts