Pâte sablée/sugar crust pastry/சுகர் கிரஸ்ட் பேஸ்டரி




     
     வாங்க இந்த முறை சுகர் க்ரஸ்ட் பேஸ்டரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

      இதுவும் பேசிக் சமையல் தான்.பேஸ்டரி எல்லாம் நம் வீட்டிலேயே செய்தால் நன்றாக இருக்கும். நமக்கு எவ்வளவு பெரியது வேண்டுமானலும். சிறியது வேண்டுமானலும். சர்க்கரை கூட்டியோ குறைத்தோக்கூட  போட்டுக்கொள்ளலாம்.

      இந்த பேஸ்டரியை வைத்து நாம் பழம் வைத்து தார்த் என்று பல செய்யலாம். இந்த பேஸ்டரி செய்வது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும்,கொஞ்சம் முயற்சி செய்தால் ருசியான பேஸ்டரி தயார்.


      இதில் பல விதமான சுகர் பேஸ்டரி இருக்கிறது. இன்றைக்கு நாம் முதலில் சாதராண சுகர் கிரஸ்ட் பேஸ்டரி செய்து பார்க்கலாம் வாங்க.

இதற்க்கு தேவையான பொருள்கள்:
  • மைதா  250 கிராம்
  • சர்க்கரை 50 கிராம்
  • வெண்ணெய் 125 கிராம்
  • முட்டையின் மஞ்சள் கரு 2
  • தண்ணீர் 50 மில்லி
  • உப்பு 1 சிட்டிக்கை


இப்போ செய்வது எப்படி என்று பார்ப்போம்:

1)வெண்ணெயை துண்டு துண்டாக வெட்டிகொள்ளவும்.




2)அதை மைதாவில் போட்டு,மாவு மணல் போல வருமாறு செய்யவேண்டும்.



3)அதில் முட்டையின் மஞ்சள் கருவை போட்டு பிசையவும். அதிலேயே சர்க்கரையையும் போடவும். பிசையவும்.





4)கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசையவும்.





நன்றாக பிசையவும்.அழுத்தி சப்பாத்தி மாவு மாதிரி பிசைய கூடாது.

5)தண்ணீர் நன்றாக எல்லா மாவிலும் போக வேண்டும். மாவு தளத்தளப்பாக இருக்க வேண்டும்.



6)மாவை அப்படியே குளிர் சாதனப்பெட்டிக்குள் குறைந்தது 30 நிமிடமாவது வைக்கவும். ஊறவைத்து செய்தால் நல்லது.

குளிர் சாதனப்பெட்டியிலிருந்து வெளியே எடுத்ததும் கொஞ்சம் அழுத்தமாகத்தான் இருக்கும்.

அதை அப்படியே கொஞ்சம் நேரம் அப்படியே வைத்தால் இலகி விடும்

கைகளால் கொஞ்சம் பிசைந்து விடுங்கள். இன்னும் இலகி கொடுக்கும்

அதனை 3 மில்லி மீட்டர் கனத்தில் உருட்டவும்.



இதுதான் சுகர் கிரஸ்ட் பேஸ்ட்ரி
copyright©jun2014 Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts