சுக்கினி சல்லாது




      வெயில் நாள் வந்து விட்டால் எங்கே பசி எடுகிறது. சூடாக சாப்பிடுவதை விட சல்லாதாக சாப்பிட்டால் பசி அடங்கி விடுகிறது. காய்கறியாகவும் இருப்பதால் உடலுக்கும் நல்லதாக இருக்கிறது. நிறைய தண்ணீர்,நிறைய காய்கறிகள்,பழச்சாறுகள் இது போதுமே. இது சத்துள்ள உணவுதானே.

இன்னைக்கு சுக்கினி சல்லாது எப்படி செய்வது என்று பார்போம்.

 இதற்க்கு தேவை:
  • 4 சுக்கினி/courgette
  • 1 - 2 சிகப்பு மிளக்காய்
  • 1 பெரிய எலுமிச்சைப்பழம்
  • 2 டேபுள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 2 பல் பூண்டு
  • கொத்தமல்லி அல்லது பார்ஸ்லி இலை.
  • உப்பு


செய்முறை:

      சுக்கினியை தேர்ந்து எடுக்கும் போது இளம் சுக்கினியாக தேர்ந்து எடுக்க வேண்டும்.

       அதில் அவ்வளவாக நடுவில் விதைகள் இருக்காது.
பெரியதாக இருந்தால் கவலை இல்லை. பாதியாக அரிந்து நடுவில் இருக்கும் விதைகளை அப்படியே எடுத்து விடுங்கள்.




1)சுக்கியை மெலியதாக சீவி விடுங்கள்.

2)சிகப்பு மிளக்காயை பொடியாக அரிந்துகொள்ளுங்கள்.

3)ஒரு சின்ன கிண்ணத்தில் எலுமிச்சைபழத்தை பிழிந்து  ஜூஸ்ஸை எடுத்துக்கொள்ளவும்.

சோஸ்
4)எலுமிச்சை ஜூஸ்ஸில் எண்ணெய்யை நன்றாக கலக்கவும்.அதிலேயே பூண்டை நன்றாக நசுக்கி போடவும். அரிந்த சிகப்பு மிளக்காயை போடவும். எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். சோஸ் ரெடி.



5)மெல்லியதாக அரிந்து வைத்திருக்கும் சுக்கினியில் சோஸ்ஸை ஊற்றி நன்றாக கிண்டவும்.

 சுக்கினி சல்லாது ரெடி.

குளிர்சாதனப்பெட்டியில் வைத்தும்  சாப்பிடலாம்.

    
இது சீக்கிரமாக செரித்துவிடும் ஒரு காய்.இதில் நீர் சத்து அதிகம்.இதில் கலோரி மிகவும் குறைவு. இதில் வைட்டமின் சி  இருக்கிறது.

100 கிராம் சுக்கினிக்கு
  • கால்சியம் 30 மில்லிகிராம்
  • இரும்பு சத்து 1.5 மிகி
  • மேகினிஷியம் 0.14 மிகி
  • பொட்டாஷியம் 200 மிகி

  copyright©jun2014 Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts