Purée de Pomme de terre et Petits pois/ உருளைக்கிழங்கும் பச்சைபட்டாணி ப்யூரே



      


இந்த உணவு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு  5 - 6 மாததிலிருந்து கொடுக்கலாம்.

       7 - 8 மாததிலிருந்து மீன் கலந்து கொடுக்கலாம். இப்படி கொஞ்சம் 

கொஞ்சமாக கலந்து கொடுங்கள்.


 வயதானவர்களுக்கும் கொடுக்கலாம்.


இது இங்கு சாதாரணமாக சாப்பிடும் உணவு.


    இதனை சாப்பிடும் போது மீனும்,கறியும் இதற்க்கும்

வைத்துக்கொண்டு சாப்பிடுகிறார்கள்.



இதற்க்கு தேவையானவை:

  • உருளைக்கிழங்கு 500 கிராம்
  • பச்சைப்பட்டாணி 150 கிராம்


4 - 5 மாத குழந்தை என்றால்

குழந்தை குடிக்கும் பால் கொஞ்சம்.

தாய் பால் என்றால் தண்ணீர் மட்டும் போதும்.

வெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் 1 டீஸ்பூன்

உப்பு வேண்டாம்


பெரியவர்கள் என்றால்

  • பால்  100 மில்லி
  • கீரிம் 100 மில்லி
  • தண்ணீர் 25மில்லி
  • வெண்ணெய் 3 டீஸ்பூன்
  • உப்பு
  • மிளகுத்தூள்


செய்ய வேண்டியது :

1)உருளைக்கிழங்கு பச்சைப்பட்டாணி இரண்டையும் வேகவைக்கவும்.







2)நன்றாக வெந்த பின்பு, காய்கறிகளை நன்றாக மசிக்கவும்.

3)மசித்த காய்கறியில் பாலை சுட வைத்து அதில் ஊற்றவும்.

4)நன்றாக கிண்டவும்.வெண்ணெய் போட்டு கிண்டவும்.

5)குழந்தைகள் என்றால், இது போதும் கொடுங்கள்.


4 - 5 மாத பிள்ளைகள் என்றால் கொஞ்சம் அதிகமாக தண்ணீராக
இருக்க வேண்டும்.


7- 8 மாத பிள்ளைகள் என்றால் தண்ணீர் கொஞ்சம் 

குறைத்துக்கொள்ளலாம்.


       பால் அவர்கள் குடிக்கும் பால் கலந்து,வெண்ணெய் 

கலந்து கொடுங்கள்.


      
       மீன் அல்லது கறி சேர்பதாய் இருந்தால், சாப்பாடு கொடுப்பதற்க்கு 

முன்பு வேக வைத்த கறி அல்லது மீனை ஆய்ந்து மசித்து ப்பூரேவில் கலந்து 

கொடுங்கள்.


      பெரியவர்களுக்கு என்றால்,சாதாரணமான பால்,கீரிம் ஊற்றி 

கிண்டவும்






      பிறகு உப்பு, மிளகுத்தூள் போட்டு கிண்டி வெண்ணெய் போட்டு

கிண்டி இறக்கவும்.




      
      
      கறி அல்லது மீனுடன் சாப்பிடவும்.


      இது  மதிய உணவாக நாங்கள் சாப்பிட தயாரித்த போது எடுத்த 

படங்கள்


     இதில் கீரிம், பால் எல்லாம் சேர்த்து இருக்கிறேன்.

ப்யூரே செய்து விட்டு உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள்.

copyright©jun2014 Kolly2wood.blogspot.com



Comments

Popular Posts