க்ரேம் கராமேல்/Crème caramel






      க்ரேம் தேஸேரில் ஒரு சுலபம் இது பிள்ளைகளுக்கு கொடுப்பதும் சுலபம். பல் இல்லாத முதியவர்களுக்கு கொடுப்பதும் சுலபம். நடுவில் நாம் சாப்பிடுவதும் தான் சுலபம்.

      இதுமாதிரி நான் பாண்டிச்சேரியில் இருக்கும்போது க்ரேம் என்று ஆவியில் இட்லி குண்டானில் அல்லது மில்க் குக்கரில் செய்வார்கள்.

      இங்கு பின் வரும் பாணியில் செய்கிறார்கள்.

      எப்படியும் பாண்டிச்சேரிக்கு க்ரேம் என்று வந்தது பிரஞ்சுகாரர்களால் தானே. அதனால், இருந்து விட்டு போகட்டும் பல வித மாடல்கள். நமக்கு அதனால் லாபம்தான்.

         இன்றைக்கு இந்த சீமை மாடல் சொல்லித்தருகிறேன். பிறகு அக்கறை சீமை மாடல் சொல்லித்தருகிறேன். சரியா?

       இது குழந்தைகளுக்கு என்றால் ஒன்றை வயது அல்லது 2 வயது   முதல் கொடுக்கலாம். பிள்ளைகளின் உடல் நலம் பொறுத்து கொடுக்கலாம்.

வாங்க ரெசிபிக்கு போகலாம்.

இதற்க்கு வேண்டிய பொருட்கள்:
  • முட்டையின் மஞ்சள் கரு 4
  • முழு முட்டை   1
  • பால்  1/2 லிட்டார்
  • வனிலா 1 டீஸ்பூன்
  • சர்க்கரை 40 கிராம்


கராமலுக்கு
  • 100 கிராம் சர்க்கரை
  • 2 கரண்டி தண்ணீர்

செய்முறை:

1)முதலில் முட்டையையும் சர்க்கரையும்





நன்றாக அடித்துக்கொள்ளுங்கள்.




கராமேல்/caramel

2)பின்பு ஒரு கசரோலில் கராமலுக்காக வைத்திருக்கும் சர்க்கரையையும் தண்ணீரையும் போட்டு அடுப்பில் வையுங்கள்.




அது, பொன்னிறமாக வரும்.




3)கராமல் பொன்னிறமாக வரும்.



  
  கராமல் பொன்னிறமாக வரும்போதுபாலை ஊற்றவும்.

4)பாலை ஊற்றி கராமல் கரையும் வரை நன்றாக கிண்டி சிறுத்தீயில்  பாலை காய்ச்சவும்.





5)காரமல் கரைந்தவுடன், பாலை அடித்து வைத்துள்ள முட்டையில் ஊற்றவும்.
முட்டையும் பாலையும் நன்றாக கலக்கி விடவும்.



6)அவணை 200° முற்சூடு செய்துக்கொள்ளவும்.

7)கலக்கி வைத்திருக்கும் கலவையை ஒரு சின்ன சின்ன கிண்ணத்தில் ஊற்றி டபுள் பயிலர் முறையில்  வேக விடவும்.




8)ஒரு ட்ரேவில் தண்ணீர் ஊற்றி அதில் நீங்கள் நிரப்பி வைத்திருக்கும் க்ரேம்மிற்க்கான கலவையை வைத்து விடுங்கள். இதுதான் அவணில் வைக்கும் டபுள் பயிலர் முறை.

9)அவணை 150° யில் 50 நிமிடங்கள் வைத்து க்ரேமை எடுங்கள்.
க்ரேமை அவணில் இருந்து எடுத்து ஆறவிடுங்கள்.
  
பிறகு,க்ரேம் தயார்.

10)குளிர் சாதனப்பெட்டிக்குள் வைக்கவும். குறைந்தது 2,3 மணி நேரங்களாவது இருக்க வேண்டும்.

குளிர்ந்ததும் சாப்பிடுங்கள்.

சாப்பிட்டு பாருங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் கொடுங்கள்.கூடவே நீங்களும் சாப்பிடுங்கள்.




இது எங்கள் வீட்டில் செய்து வைத்தால் உடனே காலியாகி விடும். பிள்ளைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டு விடுவார்கள்.
copyright©Jun2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts