புடவை வருமா? வராதா?





        

      நான் இந்தியாவிற்க்கு 1999 ல் என் தம்பியின் திருமணத்திற்க்காக வந்திருந்தேன். என்னுடன் எங்கள் நண்பர்கள் (வெள்ளைக்காரர்கள்) சிலர் திருமணத்தில் கலந்துக்கொள்ள வந்திருந்தனர்.

    அவர்களுக்கு திருமணத்து எல்லா வைபவங்களிலும் கலந்துக்கொள்ள ஆசையாக இருக்கிறது என்று ஏற்கனவே எங்களிடம் சொல்லி இருந்தார்கள்.

     அதனால்,அவர்களை பத்தரிக்கை கொடுப்பதில் இருந்து எல்லாவற்றிக்கும் அழைத்து சென்றோம்.

     அவர்களை பொருத்த வரை நாங்கள்தான் இந்தியாவின் எடுத்துக்காட்டு.
1999ல் தான் அவர்கள் முதல் முதலாக இந்தியா வருகிறார்கள்.

      இங்கு(Franceல்)   எல்லாரும் நைட்டி  இரவில் மட்டும் தான் போடுவோம். யார் எதிரிலும் அதனுடன் வெளியில் வரமாட்டோம்.

      காலையில் எழுந்தவுடன் உடையை மாற்றிக்கொள்வோம். அத்துடன் தூங்கும்போதுதான் நைட்டி.

      இந்தியாவில் பத்திரிக்கை கொடுக்க சென்ற போது பல வீடுகளில் பெண்கள் எங்களை வரவேற்றது நைட்டியுடன் தான்.

      அது நைட்டி என்று எங்களுடன் வந்த எங்கள் நண்பருக்கு தெரியாது.

நான் இந்தியா வரும்போது நைட்டி ஒன்றுதான் எடுத்து வந்து இருந்தேன்.

      அந்த சமயத்தில், நாங்கள் ஒரு கண்காட்சிக்கு சென்றிருந்தோம். அங்கு நைட்டியை பார்த்த நான், நைட்டி வாங்கலாம் என்று வாங்க போனேன்.

அப்போது தான் அவர் கேட்டார் " புடவையும், இந்த உடையும் தான் உங்கள் மரபு உடையா? என்று. நான்ஏன் அப்படி கேட்கிறீர்கள்” என்று கேட்டேன். அதற்க்கு அவர்நாம் சென்ற இடங்களில் பல பெண்கள் இதனைதான் அணிந்திருந்தனர். நீயும் இதை வாங்குகிறாய்” என்று சொன்னார்.
நான் அவருக்கு  இது நைட்டி என்று சொன்னேன். அவர் இதை ஏன் எப்போதும் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்று கேட்டார். நான் என் நாட்டில் இருப்பவர்கள் அவ்வளவு சோம்பேறிகள். என்று சொன்னேன்.

அடுத்தது.

       இங்கு(Franceல்) யாராவது விருந்தினர் வந்தால் டி.வியை நிறுத்திவிட்டுத்தான் பேசுவார்கள்.
     
      இந்தியாவில்  யார் வீட்டிற்க்கு சென்றாலும் டி.வியை நிறுத்தாமல் பேசுகிறார்கள்.


     பேசுவதும் டி.வி சீரியலை பார்த்துக்கொண்டேதான். அவர்கள்  

பேசும்போது ஏனோதானோ என்று இருக்கிறது.

சீரியல் மேல் அவ்வளவு ஆசை.


      ஒரு தெருவுக்கு போனால் வரிசையாக ஒரே சீரியலை 

கேட்டுகொண்டே போகலாம். பைத்தியமாக இருக்கிறார்கள்.

எனக்கு இருக்கும் சந்தேகம் எல்லாம், எப்படி 

எல்லா கதைகளையும் நினைவில் 

வைத்துக்கொண்டு பார்க்கிறார்கள்?. குடும்பத்தில் இவர்களுக்கு ஈடுப்பாடு 

இருக்குமா? இருக்காதா? எப்படி  நியாபகத்தில் எல்லாம் இருக்கிறது

அவ்வளவு புத்திசாலிகளா? எல்லாரும்.காலையில் எப்படி எழுந்திருக்க 

முடிகிறது?

      புரியவே இல்லை. புரியாத புதிராக இருக்கிறது

பிள்ளை,குடும்பத்தினருடன் பேச இவர்களுக்கு நேரம் கிடைக்குமா?


      இதை பற்றி எழுத வேண்டும் என்று வெகு நாட்களாக நினைத்திருந்தேன்

     இன்று சன் டி;வியில் வாங்க பேசலாம் நிகழ்ச்சியில்  நைட்டியை பற்றி பேசினார்கள்.அப்போது இது நினைவிற்க்கு வந்தது.

       புடவை அன்றாட வேலைக்கு ஒத்து வரவில்லை என்று சுடிதாருக்கு மாறினார்களாம். இது ஒத்துவராத காரணம்தான்.

எப்படி என்று கேட்கிறீர்களா?

அந்தக்காலத்தில், புடவை கட்டிக்கொண்டு பெண்கள் ஸ்க்கூட்டரேட்டி 
இருக்கிறார்கள்.

வேலைக்கு போனதே இல்லையா? என்ன? அப்போது, இப்போது இருக்கும் 

மிக்ஸி,கேஸ் அடுப்பு எதுவும் கிடையாத நாட்களிலும்  பெண்கள் வேலை 

செய்யவில்லையா? என்ன?

சித்தாள் வேலையே புடவையுடன் செய்து இருக்கிறார்கள். சுடிதார் ஏது?

காடு, கழனி வேலை எல்லாம் எவ்வளவு கஷ்டமான வேலை?

இது எல்லாம் புடவையுடன் செய்யவில்லையா?

பஸ் அந்த காலத்தில் பிடித்து வேலைக்கு செல்லவில்லையா

காலேஜ்ஜிக்கு செல்லவில்லையா?

புடவையை அடக்கமாகவும் கட்டலாம்.அடக்கம் இல்லாமலும் கட்டலாம்

அது நாம் உடுத்துவதில் உள்ளது.புடவை, சட்டை அணிவதில் உள்ளது

முந்தாணியை ஒத்தையாக எடுத்து சொருகுவது என்பது எல்லாம் 

இப்போது கிடையாது.

எல்லா உடைகளிலும் அடக்கமாகவும் உடுத்தலாம்

அடக்கம் இல்லாமலும் உடுக்கலாம்.

புடவை நம் நாட்டு உடை அதை நாம் மறப்பது நல்லது இல்லை. சுடிதார் 

எங்கிருந்தோ வந்தது. இப்போது ஜீன்ஸ். இங்கு(Franceல்) குளிருக்கு போடுகிறோம்.வெய்யிலுக்கு???

எங்கு போனது அழகான பாவாடை சட்டை?

எங்கு போனது அழகான பாவாடை தாவணி?

எங்கே போனது குங்கும பொட்டு?

இந்திய முகம் மாறி போச்சே.!!!

எப்போது  திரும்பவும் நாம் இந்தியராக மாறபோகிறோம்.

இந்தியா இந்தியாவாகவே இருக்குமா?

வெளிநாடாக மாறிவிடுமா?

வெளிநாட்டிலிருப்பவர்கள் அவர்களின் மொழிகளையோ உடைகளையோ 

எதையும் விட்டுக்கொடுபது இல்லை.

ஆனால்,நாம். !!!!. இந்தியாவில் 

இருந்துக்கொண்டே!!!!! யோசிப்போமா? இனிமேலாவது?,,,,,

 copyright©jun2014 Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts