தாய்மை அனுபம் 22

  


      ஆஹா நம் பிள்ளைகள் பெரிய வாயாடிகளாக 

ஆகும் வயது வந்து விட்டது. 

     
     சொன்னா புரியாது. அனுபவிக்க போரிங்க இல்ல, அப்போ 

புரியும். 

      
     நான் அதை எல்லாம் முடித்து விட்டேன். மழலை வாயாடி தனம். 

இனிமையான வாயாடிதனம். நாம் ரசிக்கும் தருணம்.

       
     நாம் பெற்ற செல்லம். நம்முடன் உரையாடும் தருணம்.

       
     2 வயதிலிருந்து வார்த்தைகள் தெளிவாக வரும். தெளிவாக ஒரு 

வாக்கியமாக பேசுவார்கள்.

       
     நிறைய இது என்ன?ஏன்?எதற்க்கு என்ற கேள்விகள் நிறைய 

கேட்பார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் சோர்வு 

இல்லாமல் பதில் சொல்ல வேண்டும். 

      
     எந்த நேரத்திலும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் 

இருக்க கூடாது.

      
      வார்த்தைகள்,வாக்கியங்கள் தவறாக சொன்னால் சின்ன 

பிள்ளைதானே என்று இல்லாமல், தவறுகளை திருத்துங்கள்.பலமுறை 

திருத்துங்கள்.

      
     சின்ன சின்ன பாடல்கள் சொல்லிக்கொடுங்கள். திரும்பவும் பாட 

சொல்லுங்கள்.

       
      சின்ன சின்ன புத்தகங்கள் வைத்து பிள்ளைகளை விட்டே 

அதிலுள்ள படங்களை விளக்க சொல்லுங்கள்.

      
      சில கலர்களின் பெயர்களை சொல்லிக்கொடுக்கலாம்.

       உருவத்தின் பெயர்களையையும் சொல்லிக்கொடுக்கலாம்.

உதரணத்திற்க்கு தட்டைக்காட்டி இது ரவுண்டாக இருக்கிறது.என்று 

சொல்லலாம். இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக்கொடுங்க்கள்.

      காய்கறி பெயர்களையையும் சொல்லிக்கொடுக்கலாம்.

     பழப்பெயர்களையும் சொல்லிக்கொடுக்கலாம்.

       இதுவெல்லாம் நாம் சமைக்கும் போது பிள்ளைக்கு 

சொல்லிக்கொடுக்கலாம். அல்லது கடைக்கு பிள்ளையை அழைத்து 

செல்லும் போதும், காய்கறி,பழம் இவைகளை காட்டி பெயர்களை 

சொல்லிக்கொடுங்கள்.

     
      பஸ்ஸில்/Puzzle செய்ய சொல்லிகொடுக்கலாம். 2 - 10 பீஸ் வரை 

பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.

 விளையாடியதும் விளையாட்டு பொருட்களை அடிக்கி வைக்க பழக்கி 

விடுங்கள்.

மற்ற பொருட்களையும் அதன் இடத்தில் வைக்க பழக்குங்கள்.

     
     குளிப்பாட்டி விடும்போது குளிக்க சொல்லிக்கொடுங்கள். 

விளையாட்டாக சொல்லிக்கொடுங்கள்.


     சோப்பு நுரையுடன் விளையாடுங்கள். உடம்பில் எப்படி தேய்ப்பது 

என்று சொல்லிக்கொடுங்கள். 

      தனியாக குளிக்கும் அளவுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். 

  சில பிள்ளைகள், 5 வயதிலிருந்தே தனியாக குளிக்க 

ஆரம்பித்து விடுகிறார்கள்.

     
     ஒரு பிள்ளைக்கு 15 மாதத்தில் ஏறக்குறைய நிறைய பற்கள் 

வந்து விடுகிறது. அதிலிருந்தே பிள்ளைக்கு பல் விலக்கும் பழக்கத்தை 

கொண்டு வரவேண்டும்.


     நிறைய பிள்ளைகளுக்கு பல் விலக்கும்போது எச்சில் துப்ப 

தெரியாது. 

     நாம் பல் விலக்கும் போது துப்பிக்காட்ட வேண்டும்.

எப்படி வாய் கொப்பளிக்க வேண்டும் என்றும் சொல்லிக்கொடுக்க 

வேண்டும்.

      
     15 மாத பிள்ளைகளுக்கு பேஸ்ட் போடாமல் பல் விலக்க 

சொல்லிக்கொடுக்கலாம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக 

பேஸ்ட் உபயோக படுத்துங்கள்.



    பேஸ்ட்டும் பிள்ளைகளுக்கான பேஸ்ட்டை  

உபயோகப்படுத்துக்கங்கள்.



     நாம் உபயோகப்படுத்தும் பேஸ்ட்டை பிள்ளைக்கு 

உபயோகபடுத்தினால் காரமாக இருக்கும்.


     

     பிரஷ்ஷும் பிள்ளைக்கான பிரஷ்ஷை 

வாங்கி உபயோகபடுத்துங்கள்.


      உங்களுடன் சிறு சிறு வேலைகள் செய்ய ஆரம்பிப்பார்கள்.

செய்ய சொல்லிக்கொடுங்கள். தட்டு எடுத்து வர சொல்லாம். கரண்டி 

எடுத்து வர சொல்லலாம்.

     
      சாப்பிடுவது தனியாக சாப்பிட தொடங்கி விடுவார்கள்.

எல்லாவற்றையும் வெட்டி,ஆய்ந்து வைத்து விட்டால்,

அவர்கள் தானாக சாப்பிட்டு விடுவார்கள். கீழே இரைக்காமல் 

சாப்பிடுவார்கள். மேலேயும் பூசிக்கொள்ள மாட்டார்கள்.


     
      எல்லாமே நீங்கள் பழக்குவதில்தான் இருக்கிறது.

பிள்ளைகளுக்கு  பெரியவர்களிடம் மரியாதையாக பேச 

சொல்லிக்கொடுங்கள். 


     
      இதுப்போல் இந்த வயதிலிருந்துதான் நிறைய சொல்லிக்கொடுக்க 

வேண்டும்.




மீண்டும் சந்திக்கலாம்.
copyright©Jun2014Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts