Tarte à la tomate/ தக்காளி தார்த்






     இந்த தார்த் செய்வது மிகமிக சுலபம்.

     பிள்ளைகளுடன் இதனை செய்யலாம். தக்காளி அடுக்குவது, வாசனை இலையை தூவுவது போன்ற வேலைகளை மிகவும் விரும்பி செய்வார்கள்.

தக்காளி தார்த்துக்கு தேவையான பொருள்கள்:
  • பாத் பிரியே/Pâte Brisée
  • தக்காளி 3 அல்லது 4
  • கடுகு பேஸ்ட்/Moutarde 2 அல்லது 3 மேஜைக்கரண்டி
  • உப்பு,மிளகுத்தூள்
  • எல்லாம் கலந்த வாசனை இலை (பசலிக்,ரோமரன்..)/Herbes de Provence  1 டீஸ்பூன்
  • சீஸ் துருவியது 100 - 150 கிராம்
  • ஆலிவ்  எண்ணெய் 1 டீஸ்பூன்

செய்முறை:

1)முதலில் பாத்தை ரெடி செய்துக்கொள்ளுங்கள்.

2)தக்காளியை வட்ட வட்டமாக வெட்டி வையுங்கள்.

3)எல்லா பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

4)பாத்தை ஒரு தட்டில் உருட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

5)அவணை 180° யில் முற்சூடு செய்துக்கொள்ளுங்கள்.

6)தட்டில் உருட்டி வைத்துள்ள மாவை முற்சூடு செய்த அவணில் 8 - 10 நிமிடங்கள் வைக்கவும்.

வெந்த மாவை வெளியே எடுத்து விடவும்.

7)வெந்த மாவின் மீது முத்தார்தை தடவவும். மாவின் உட்பக்கம் மட்டும் தடவும். பக்கவாட்டில் தடவ வேண்டாம்.




முத்தார்தை எங்கு பார்த்தலும் தடவி விட்டீர்களா?

8)அதன் மீது அழகாக வட்டமாக அரிந்து வைத்துள்ள தக்காளியை நெருக்கமாக அடுக்கவும்.

9)தக்காளியின் மீது கொஞ்சம் வாசனை இலையை தூவி விடவும்.

10)உப்பு,மிளகுத்தூளையும் தூவிவிடவும்.

11)தக்காளியின் மீது துருவிய சீஸ்ஸை போடவும்.




12)அதன் மீது கொஞ்சம் வாசனை  இலையை இன்னும் ஒரு முறை தூவி விடவும்.

13)பிறகு,ஆலிவ் எண்ணெய்யை எல்லா தக்காளியிலும் படும்மாறு ஊற்றவும்.ஒரு டீஸ்பூனால் ஊற்றுங்கள்.

14)எல்லாம் போட்டு தாயரித்த தார்த் தட்டை முற்சூடு செய்த அவணில் வைக்கவும்.

20 - 25 நிமிடங்கள் வேகவிடவும்.




வெளியே எடுத்து சல்லாதுவுடன் சாப்பிடலாம்.

சின்ன சின்னதாக வெட்டி ஸ்டராகவும் சாப்பிடலாம்.

*முத்தார்த் வெந்து விடுவதால் காரம் தெரியாது.
copyright©Oct2014kolly2wood.blogspot.com


Comments

Popular Posts