Carotte et poulet Sandwich/ கேரட்,கோழி ஸேன்விச்






        ஸேன்விச் பற்றிய கதையை முதலில் தெரிந்துக்கொள்ளலாம்.

     இங்கிலாந்தை சேர்ந்த John Montagu, 4th Earl of Sandwich  என்பவர்,சீட்டு ஆட்டம் ஆடுவார். அதில் அவருக்கு மிகுந்த ஆர்வம் மிக்கவர்.
அவர் சீட்டு ஆட்டம் ஆடும்போது சாப்பிட பாதியில் எழுந்திரித்தால் ஆட்டம் பாதியில் கெட்டுவிடும் என்று நினைத்தார்
     
     அதனால் அவரது வேலைக்காரரிடம் ரொட்டியின் உள்ளே எல்லாவற்றையும் வைத்து கொடுக்க சொன்னார்.

     வேலைக்காரரும் ரொட்டியின்னுள் கறியும்,சீஸ்ஸூம் வைத்துக்கொடுத்தார். அந்த ரொட்டியை சீட்டு ஆடிக்கொண்டே சாப்பிட்டார். கையும் அழுக்கு ஆகாமல்  இருந்தது.

     அவர் இதனை சாப்பிட்டதால்,அந்த ரொட்டிக்கு ஸேன்விச் என்று பேர் வந்தது.

      இப்படியே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பிரபலமனது.
20ஆம் நூற்றாண்டில் எல்லா நாடுகளிலும் பரவியது.

     ஸேன்விச் தான் முதல் ஃபாஸ்ட் ஃபுட்/Fast food

இப்பொழுது ஒரு ஸேன்விச் ரெசிப்பியை பார்ப்போம்.

இதற்கு தேவையானது:
  • ரொட்டி உங்களுக்கு தேவையான அளவு.
  • சல்லாது இலை
  • தக்காளி
  • கேரட்
  • கோழிக்கறி
  • உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு சாஸ் கேச்சப்,மையோனைஸ்..


செய்முறை:

1)ரோல் ரொட்டியை உங்களுக்கு தேவையான அளவில் வெட்டிக்கொள்ளுங்கள்.

2)சல்லாது இலையை நன்றாக கழுவி வைக்கவும்.இலையின் நடுவில் இருக்கும் மொத்தமாக இருக்கும் தண்டை எடுத்துவிடவும்.

3)கேரட்டை துருவிக்கொள்ளவும்.

4)தக்காளியை மெல்லியதாக அரிந்து வைக்கவும்.

5)கோழியை உப்பு,காரம் போட்டு வேகவைத்துக்கொள்ளவும்.
அல்லது கோழியை உப்புக்காரம் போட்டு,எண்ணெய் கொஞ்சம் ஊற்றி பொரித்துக்கொள்ளலாம்.

6)வெந்த கோழிக்கறியை பிய்த்து வைத்துக்கொள்ளவும்.

7)ரொட்டியின் நடுவில் வெட்டிக்கொள்ளவும்.

8)வெட்டிய ரொட்டியில்,உங்களுக்கு பிடித்த சாஸ்ஸை இரண்டுப்பக்கமும் தடவிக்கொள்ளவும்.

9)சாஸ் தடவிய ரொட்டியில் முதலில் சுத்தப்படுத்திய சல்லாது இலையை வைக்கவும்.

10)அதன் இடையில் துருவிய கேரட்டை வைக்கவும்.





11)கேரட்டின் இரண்டு பக்கமும் அரிந்து வைத்துள்ள தக்காளியை வைக்கவும்.

14)கேரட்டின் மேல் கறியை வைக்கவும்.

    *நீங்கள் சைவ ஸேன்விச் சாப்பிட வேண்டும் என்றால், கறியை வைக்காமல் சாப்பிடலாம்.

     உங்களுக்கு பிடிக்கும் என்றால்,ஸேன்விச்யின் மேலும் சாஸ் ஊற்றியும் சாப்பிடலாம்


     உங்களுக்கு விருப்பமான சாஸ்ஸுடன் சாப்பிடலாம்:.

கெட்சப்,மையோசைஸ்,மஸ்டர்ட் சாஸ்,ஹரிஸா... எதாவது வைத்து சாப்பிடலாம்.

     இதனை செய்து  நீங்கள் மதிய சாப்பாடிற்கு எடுத்து செல்லலாம்.

எங்காவது சுற்றுலா சென்றாலும் எடுத்து செல்லலாம்.

copyright©Oct2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts