Regime/Diet/பத்தியம் பரிகாரம்



சும்மா எல்லாதுக்கும் டையட் டையட் என்று இப்பொழுது எங்கு பார்த்தாலும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்

     என் அகராதியில் டையட் என்ற சொல் அழிக்கப்பட்டு இருக்கிறது அல்லது காணாமல் போய் விட்டது.
அவ்வொப்போது நோய் நொடியை நாங்கள் வரவேற்கும் போது மட்டும் டையட் இருப்பது வழக்கம்.

     இது மருத்துவர் யாருக்காவது பத்தியமாக கொடுத்து இருந்தால்,இங்கு நான் சொல்வது  செல்லாது. அவர் சொல்வதைதான் கேட்க வேண்டும். இதில் 
     
     எனக்கு தெரிந்தஎங்கேயோ படித்த பத்தியம்,டையட்டும் கொடுத்து இருக்கிறேன். பார்த்து சாப்பிடுங்கள்.

     எப்போதுமே டைட் என்றால், எதுவும் சாப்பிடலாம் ஆனால் அளவுடன் சாப்பிட்டால் நல்லது. தெரியாமலா சொல்லிவிட்டு போனார்கள்  நம் பெரியவர்கள்.
     அளவுடன் சாப்பிட்டால் அமிதமும் விஷம்.என்று பழமொழியை சொல்லிவிட்டு போனார்கள்.

Bland diet/ப்ளான்டு டையட்

     இது அல்சர் வந்தவர்கள்,சீதம்மாக வரும்போதும் இந்த டைட் பயன்படும்.

நீங்கள் தவிர்க வேண்டிய உணவு:

1)தவுட்டு உணவுகள்(Bran)
2) தோல் உடைய செரியால்(சோளம்,கம்பு,..)
3) பழத்தின் தோல் மற்றும் விதைகள்
4)பச்சை காய்கறிகள்
5) காய்கறிகள்:பீன்ஸ்,கோஸ்,வெண்டைக்காய்..
6) பொரித்த உணவுகள்
7)உறுக்காய்,சட்னி வகைகள்
8)காரமான உணவுகள்.
9)சாக்லெட் மற்றும் கேக் வகைகள்

Diabetic diet/ சர்க்கரை நோய்க்கு டைட்

நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

1)கிழங்கு வகைகள்
2)சர்க்கரை கலந்த உணவுகள்,சாக்லெட்,கேக் வகைகள்
3)பொரித்த உணவுகள்
4)உலர்ந்த பழங்களும் முந்திரி,வால்நட் போன்றவைகள்.
5)பழவகைகள்:வாழைப்பழம்,சப்போட்டா,செரிப்பழம்,..

சர்க்கரை நோயளிகள் சாப்பிடக்கூடிய உணவுகளும் அளவுகளும்:

1)பருப்பு மற்றும் தானிய வகைகள் 60 கிராம்.
2)காய்கறிகள் மற்றும் கீரை  200 கிராம்
3)பழவகைகள் 200 கிராம்
4)பாலும்,பால் சேர்ந்த உணவுகளும் 400 கிராம்.
5)எண்ணெய் 20 கிராம்

நோயாளி இதுவே அசைவம் சாப்பிடுவராக இருந்தால்:

மற்ற உணவுவகைகள் சைவ உணவை உண்பவர்கள் போலவே சாப்பிடலாம்.

சாப்பிட வேண்டிய உணவு வகைகளும் அதன் அளவுகளும்:
1)பருப்பு மற்றும் தானிய வகைகள் 20 கிராம்
2)பால் வகைகள் 200 கிராம்
3)மீன் மற்றும் கோழி தோல் உரித்தது.
4)மற்ற உணவுவகைகள் சைவ உணவை உண்பவர்கள் போலவே சாப்பிடலாம்.

இப்படி சாப்பிட்டால்:
கொழுப்பு சத்து 40 கிராம்.
கார்போஹைட் 40 கிராம் இருக்கும்.


Sample diet (Non-Prescribed)/எந்த நோய்யும் இல்லாதவர்களுக்கான டைட்:

சாப்பிட வேண்டிய உணவு வகைகளும் அதன் அளவுகளும்:

1)காய்கறிகள் 100 கிராம்
2)பழவகைகளில் மாவு சத்து இருக்கும் பழங்காளாக இருந்தால் 50 கிராம்
3)பால் 1லிட்டர்
4)தயிர் 300 மில்லி
5)அரிசி உணவுகள் 100 கிராம்
6)பருப்பு வகைகள் 40 கிராம்
7)உருளைக்கிழங்கு 75 கிராம்
8)சர்க்கரை 25 கிராம்
9)எண்ணெய் 25 மில்லி

     மற்றப்படி எந்த காரணத்தை முன்னிட்டு ஆலோபதி மருந்தை கைவிட வேண்டாம். நாம்தான் இயற்கை அல்லது ஹோமியோபதி அல்லது வேறு ஏதாவது ஒன்று உபயோகப்படுத்துகிறேனே அது போதும் என்று இருக்காதீர்கள்

     அதுப்போலவே ஆலோபதி மருத்துவர் சொல்வதுப்போல் கேட்டு
நடக்க வேண்டும். 3 அல்லது 6 மாததிற்கு ஒருமுறை ரத்த பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும். மருத்துவர் சொன்னால் தான் நீங்கள் மருந்தை நிறுத்த வேண்டும்.

     எந்த நோயாக இருந்தாலும் இது மாதிரியே செய்யுங்கள். எந்தவிதமான பிற மருந்துகள் சாப்பிட்டாலும், ஆலோபதியை அதனுடன் சாப்பிட மறக்க வேண்டாம்.


கொலஸ்டோரலும் கொழுப்பும் குறைத்துக்கொள்ள டைட்/Low cholesterol and reduced saturated Fat diet

சாப்பிட வேண்டிய உணவு வகைகளும் அதன் அளவுகளும்:

1)தானிய வகைகள்  300 கிராம்
2)பருப்பு வகைகள் 50 கிராம்
3)கீரை வகைகளும் 50 கிராம்
4)காய்கறிகள் 100 கிராம்
5)கிழங்கு வகைகள் 100 கிராம்
6)பழவகைகள் 100 கிராம்
7)கொழுப்பு எடுத்த பால் 400 மில்லி
கொழுப்பு எடுக்காத பால் என்றால் அதில் பாதிக்கு பாதி தண்ணீர் ஊற்றி குடிக்கலாம்.
சர்க்கரை 30 கிராம்
8)எண்ணெய்  30 கிராம்

     சுடுத்தண்ணீர் நிறையக்குடிக்கவும்.முளைக்கட்டிய தானியங்கள்.

     ஆவியில் அவித்த உணவுகளும் தாளித்த உணவு வகைகளை தவிர்தால் நல்லது.

     இதுப்போலவே சர்க்கரை வியாதி உள்ளவர்களும் செய்ய வேண்டும்.


தவிர்க்க  கூடிய உணவு வகைகள்:

1)கொழுப்பு நீக்காத பால்,கீரிம் வகைகள்
2)வெண்ணெய்,கொழுப்பு நிறைந்த எண்ணெய் பொருள்கள்(டால்டா..)
3)தேங்காயும் தேங்காய் எண்ணெயும்.
4)சீஸ்
5)சாக்லெட்
6)ஐஸ்கீரிம்
7)முட்டை வாரத்திற்கு 2
8)இறால்,பெரிய மீன்கள்
9)கொழுப்பு நிறைந்த கறி வகைகள்:சொஸிஸ்,லர்தோ
10)கறியின் உட்பகுதில் இருக்கும் ஈரல்,கிட்னி,மூளை போன்றவைகளை 
தவிர்க்க வேண்டும்.

     இது எல்லோருக்கும் பொதுவாக எழுதி இருக்கிறேன். இப்படிதான் சாப்பிடுங்கள் என்று வற்புறுத்தவில்லை. மருத்துவரிடம் கேட்டு டைட் செய்யவும். இதில் எழுதியிருக்கும் உணவில் சில உணவுகள் உங்களுக்கு ஒவ்வாமையாகவும் இருக்கலாம்.அதனால்தான் ஒவ்வொன்றையும் மருத்துவர் ஆலோசனை கொண்டு சாப்பிடுங்கள்.

copyright©Sep2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts