வாழைப்பழ போம்/Banana Bomb





      இதில் சமைக்காமல் இருக்கும் முட்டை(பச்ச முட்டை),தேன்,வாழைப்பழம் எல்லாமே சத்து மிகுந்தது.

      பிள்ளைகளுக்கு பச்ச முட்டை குடிப்பது நல்லது. அது மிகவும் சத்தானது.

      நிறைய பேர் பச்ச முட்டை குடிக்க மாட்டார்கள். இதுமதிரி கொடுத்தால்,முட்டை வாசனை இல்லாமல் குடித்து விடலாம்.

தேவையானது:
  • 1 முட்டை
  • 1 மேஜைக்கரண்டி தேன்
  • 1/4 கப் பால்
  • 1 அல்லது 2 வாழைப்பழம்


செய்வது எப்படி என்று பார்போம் :
1)வாழைப்பழத்தை துண்டு துண்டாக வெட்டி வைக்கவும்.

2)ஒரு மிக்ஸில் முட்டையை உடைத்து ஊற்றவும்,




3)வெட்டிய  வாழைப்பழம்,முட்டை,தேன்,பால் எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸில் அடிக்கவும்.




4)வாழைப்பழம் நன்றாக குழையும்வரை அடிக்கவும்.

5)ஒரு டம்பளரில் இந்த Bomb/போம்மை ஊற்றி குடிக்கவும்.

      இது ஸ்முத்தி அளவில் கட்டியாக இருக்க வேண்டும். தண்ணீராக இருக்கக்கூடாது.


வாழைப்பழத்தில் போட்டஷியம்,மக்னிஷியம்,
பாஸ்பரஸ்,கால்ஷியம் எல்லாம் இருக்கிறது.
தேன் :கால்ஷியம்,இரும்புசத்து,பொட்டாஷியம்,ஸிங்க்,செலினியம் எல்லாம் இருக்கிறது.

முட்டை:வைட்டமின்  A,D,E,K  எல்லாம் இருக்கிறது.கால்ஷியம்,ஸிங்க் போன்றவைகளும் உள்ளது.
முட்டையை கடினமாக வேலை செய்வர்களும்,ஸ்போர்ட்ஸ் செய்பவர்களும் ஏதாவது ஒரு முறையில்  முட்டைக்கூட சாப்பிடலாம். பிள்ளைகள் சத்து இல்லாமல் இருந்தால் தினமும் முட்டை சாப்பிடலாம்.
அதுவே உட்கார்ந்து வேலை செய்பவர்களும்,சர்க்கரை நோய்,கோலஸ்ட்ரால் உள்ளவர்கள் பச்சை முட்டை உபயோகிக்க வேண்டாம்.வாரத்திற்கு ஒரு முட்டை அவித்து சாப்பிட்டால் நல்லது
பால்:இதில் கெல்ஷியம் இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும்.இது இல்லாமல் ப்ரோட்டின்,கார்போஹைட்ரேட்,வைட்டமீன் A,B1,B2B12,C. 

பால்:இதில் கெல்ஷியம்,பாஸ்பரஸ்,பொட்டஷியம், இருக்கிறது.
பால் என்பது முதல் உணவு. இது மனிதனுக்கும், பல மிருகங்களும் முதல் உணவு.

      பிள்ளைகளுக்கும்,பலகீரமாக இருப்பவர்களுக்கும் கொழுப்பு நீக்காத பாலை கொடுக்கலாம்.. தினமும் பால் சம்மந்த உண்வுகளை சாப்பிட்டால் நல்லது.

       சர்க்கரை வியாதி,கொலஸ்டரால் போன்றவர்களுக்கு பாலில் தண்ணீர் ஊற்றி கொடுக்கலாம்.


copyright@oct2014 kolly2wood.blogspot.com

Comments

Popular Posts