Banh bao/ ஆவியில் வெந்த ப்ரியோஷ்





     இது chine/சீன நாட்டிலும் vietnam/வியட்நாம் நாட்டிலும் செய்யப்படுகிறது.
ஆவியில் வேக வைப்பதால்,இதன் உள்ளே கறி இருந்தும் அதிகமாக கொழுப்பு ஏறாது.


இதை இன்னைக்கு செய்து பார்க்கலாம்.

இதற்கு தேவையானது:

முதலில் Brioche/ப்ரியோஷ் செய்ய வேண்டிய பொருள்கள்:

  • Farine de blé/மைதா மாவு 300 கிராம்
  • Maïzena/சோளமாவு அல்லது Farine de riz/அரிசி மாவு 75 கிராம்
  • Levure chimique/பேக்கிங் பவுடர் 1 c à soupe/ மேஜைக்கரண்டி
  • Levure de boulanger/ஈஸ்ட் 50 - 100 கிராம்
  • sel/உப்பு
  • Lait/பால் 250 மில்லி
  • l'huile/எண்ணெய் 2 c. à c டீஸ்பூன்


இதனுள் வைக்க/Farce:

  • les oeufs/முட்டை 4 - 7
  • Saucisse chinois/சீன ஸோஸிஸ் 2
  • viande hachée/கொத்துக்கறி 250 gm/ கிராம்
  • oingnon/வெங்காயம் சின்னது 1
  • Champignon noire/கருப்பு காளான் 100gm /கிராம்
  • l'ail/பூண்டு 3 gousse/பல்
  • Nuc-mâm/sauce de poisson  நூக் மாவ் (மீன் சாஸ்) 2 டீஸ்பூன்
  • Sucre/சர்க்கரை 1/2 c à s / கரண்டி
  • sel/உப்பு
  • poivre moulu/மிளகுத்தூள்
  • Persil/பார்சி இலை


செய்ய தொடங்கலாம்:

முதலில் மேல் மாவு செய்யலாம்

1)ஒரு un petit bol/சின்ன கிண்ணத்தில் கொஞ்சம் du lait tiéde/விதவிதப்பான பாலும் sucre/சர்க்கரையுடன் Levure de boulanger/ ஈஸ்ட்டை போட்டு ஒரு 10mn/ நிமிடங்கள் வைக்கவும்.

அது பொங்கி வரவேண்டும்/laisser gonfler

2)ஈஸ்ட் பொங்கி வருவதற்கு முன்பு  Farine/மைதா மற்றும் Farine de Riz/அரிசி மாவு கலந்து வைக்கவும். இதனுடன் sel/உப்பு,levure chimique/பேக்கிங் பவுடர் எல்லாம் போட்டு mélanger/கலந்து வைக்கவும்.

3)பொங்கி வந்த levure boulanger/ஈஸ்ட்டை கலந்து வைத்திருக்கும் மாவில் ஊற்றவும் பிசையவும்.  

4)மிச்சமிருக்கும் பாலையும் ஊற்றி பிசையவும்.

5)நன்றாக பிசையவும். சப்பாத்தி மாவை விட கொஞ்சம் தளர்த்தியாக இருக்க வேண்டும்.

6)கைகளில் மாவு ஒட்டும். அப்போது கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி பிசையவும்.

7)ஓவராக எண்ணெய் வேண்டாம். ஒரு 1 மேஜைக்கரண்டி ஊற்றினால் போதும்.

8)பிசைந்த மாவை அப்படியே ஒரு 1/4 மணி நேரம் வைக்கவும். அது நன்றாக உப்பி இரண்டு மடங்காக வரும்




9)மீண்டும் அதிலுள்ள காற்று எல்லாம் போக இன்னெரு முறை பிசையவும்.




உள்ளே வைக்கும் Farce செய்யலாம்

1)நாம் மாவு பிசைய ஆரம்பிக்கும் முன்பு கருப்பு காளானை ஊறவைக்கவும்.
ஊறவைத்த காளானை அலசி எடுத்து பொடியாக அரிந்து வைக்கவும்.

2)வெங்காயத்தை பொடியாக அரிந்து வைக்கவும்.

3)பூண்டையும் பொடியாக அரிந்து வைக்கவும்.

4)சொஸிஸை வட்டமாக வெட்டி வைக்கவும்.




5)ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்

6)அது வதங்கியதும் பூண்டு போட்டு வதக்கவும். பிறகு, கொத்துக்கறியை போட்டு வதக்கவும்.

7)கொத்துக்கறியை போட்டு அது தண்ணீர் போகும் வரை வதக்கவும்.




8)அரிந்து வைத்திருக்கும் காளானை போட்டு வதக்கவும். அதில் உப்பு,மிளகுத்தூள் போடவும்.

9)அதில் Nuc-mâm/sauce de poisson/ நுக் மாவை ஊற்றி கிளறி பார்சிலி இலையை போட்டு இறக்கவும்.

10)முட்டையை வேக வைத்து உரித்து 4 - 8 ஆக வெட்டி வைக்கவும்.

11)எல்லாம் ரெடியாக இருக்கட்டும்.

12)Farcieயை ஆற வைக்கவும்.

13)அது ஆறிக்கொண்டு  இருக்கும் போது மாவு செய்து வைத்திருக்கிறோம் அல்லவா?

14)அதனை ஒரு பெரிய எலுமிச்சைப்பழ அளவு உருண்டையாக செய்து வைக்கவும்.

15)கொத்துக்கறி ஆறும் வரை உருண்டை மீண்டும் ஒருமுறை பொங்கி வரட்டும். அப்படியே இருக்கட்டும்.

Farcie ஆறி விட்டதா?

16)உடனே  மாவை வட்டமாக ஆக்கி, அதில் கொத்துக்கறி செய்து வைத்துருக்கிறோம் அல்லவா? அதன்  நடுவில் Farcie யை வைக்கவும்
17)அதில் அரிந்து வைத்த  முட்டையை  வைக்கவும்.சொஸிஸும் ஒவ்வொரு உருண்டையிலும் வைக்கவும்.




பிறகு, உருண்டையாக உருட்டவும்.




18)ஒரு ஏனத்தில் தண்ணீர் சுடவைக்கவும். ஒரு இட்லி குண்டானில் கூட வைத்துக்கொள்ளலாம்

19)இட்லி தட்டில் Banh bao யை Butter paper
 போட்டு ஆவியில் இட்லி அவிப்பதுப்போல் வேகவிடவும்.
10லிருந்து 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.




*இதில் நான் உபயோகத்து இருப்பது அரிசிமாவு. மைதா சோளமாவு கிடையாது.


ரெடியாக இருக்கும்  Banh bao யை Nuoc mâm/Fish sauce/பிஷ்சாஸ்ஸுடன் சாப்பிடுங்கள்.
copyright@oct2014 kolly2wood.blogspot.com

Comments

Popular Posts