Finger chips/Frite de pomme de terre/உருளைக்கிழங்கு ஃப்ரித்

இது பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த உணவு.எந்த பிள்ளையும் ஃபிர்த்/Frites வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள்.





     இதனை வீட்டில் செய்யும் முறையை உங்களுக்கு இன்று சொல்லிக்கொடுக்க போகிறேன்.

     வாங்கிக்கொடுப்பதை விட நாம் செய்துக்கொடுப்பது ருசியாகவும்,உடம்புக்கு நல்லதாகவும் இருக்கும்.

      நான் அடிக்கடி பிள்ளைகளுக்கு கொடுப்பேன். அந்த முறையை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

தேவையானது:

  • 500 கிராம் உருளைக்கிழங்கு
  • பொரிக்க  எண்ணெய்
  • உப்பு,மிளகுத்தூள்


செய்முறை:

1)உருளைகிழங்கை நன்றாக கழுவி தோலைச்சீவி விடவும்.

2)தோலைச்சீவை வைத்த உருளைக்கிழங்கை மெல்லியதாக அரிந்துக்கொள்ளவும்.

3)அதனை ஒரு 10 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு வைக்கவும்.




4)10 நிமிடங்கள் கழித்து உருளைக்கிழங்கில் உள்ள தண்ணீரை ஊற்றி விடவும்.
இன்னும்மொரு முறை தண்ணீர் ஊற்றிக்கழுவி விடவும்.

5)கழுவிய கிழங்கை ஒரு துணியில் போட்டு நன்றாக அதில் உள்ள தண்ணீரை துடைத்து விடவும்.







தண்ணீர் நன்றாக போயிருக்க வேண்டும்.

6)ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெட்டிய உருளைக்கிழங்கை அதில் போட்டு 10 நிமிடங்கள் பொரித்து எடுக்கவும். 




7)எண்ணெய்யை வடித்து வைக்கவும்.

8)பிறகு மீண்டும் ஒருமுறை 5 நிமிடங்கள் பொரித்து எடுக்கவும்.

       *அடுப்பில் எண்ணெய் நன்றாக காயவேண்டும். அடுப்பின் தீயும் நன்றாக இருக்க வேண்டும். தீயை அடக்க வேண்டாம்.

9)பொரித்த உருளைக்கிழங்கை எண்ணெய் வடித்து வைக்கவும்.




10)சூடாக இருக்கும்போதே உப்பு,மிளகுத்தூள் போட்டு கலந்து சாப்பிடவும்.

copyright©Oct2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts