Crêpes/க்ரேப்



இதுவும் பிள்ளைகளுகு மிகவும் பிடித்த உணவுதான்.

      இதனை பிள்ளைகள் பள்ளி விட்டு வந்த பின்பு அல்லது இரவு நேரத்தில் செய்து கொடுக்கலாம்.இதனை ஒன்று இரண்டு சாப்பிட்டாலே பசி அடங்கி விடும்

      இந்த உணவு பிள்ளைகளுக்கு 3 வயது அல்லது அதற்க்கு முன்பும் கொடுக்கலாம்.

       இது பிரான்சில் ஷாந்தலர்/chandeleur என்னும் விழாவின் போது கண்டிப்பாக எல்லோர் வீட்டிலும் செய்வார்கள். பிள்ளைகள் இதனை Fête des crêpe/க்ரேப் திருவிழா/என்பார்கள்.

      நீங்கள் ஒரு தடவை செய்து விட்டால்,பிள்ளைகள் கண்டிப்பாக அடிக்கடி கேட்பார்கள்.

     பிரான்சில் ஒரு ஒரு ஊரிலும் ஒவ்வொரு முறையில் செய்வார்கள். இதில் மிகவும் பிரபலமானது crêpe sarrasin/ க்ரேப் சலர்சன். இது Bretoone/ பிரோத்தில் செய்யும்   க்ரேப்.

     உங்களுக்கு செய்ய கற்றுக்கொடுப்பது சாதாரணமாக எல்லோரும் செய்யும் க்ரேப்.

     இது நம்ம ஊரில் மைதா தோசை செய்வது போலத்தான் இருக்கும்.ஆனால் கொஞ்சம் மாறுப்பட்டது.

     உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் வந்தாலும் இதை செய்துக்கொடுங்கள். நான் என் பிள்ளைகளின் நண்பர்கள் வருகிறார்கள் என்றால் முதலிலேயே மாவை கரைத்து வைத்து விடுவேன். அவர்கள் வந்து விளையாடி கொண்டு இருக்கும் போதே இதனை செய்துக்கொடுப்பேன். அவர்கள் சந்தோஷமாக ஜாம்/jam,ன்யூத்தலா/nutella வைத்து சாப்பிடுவார்கள்.

     இரவு சாப்பாடு என்றால் ஜாம்ப்போம்,வைத்து சீஸ் போட்டு சாப்பிடுவோம்.

     இதை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம்.

வாங்க க்ரேப் செய்யலாம்.

இதற்கு நீங்கள் வாங்க வேண்டிய பொருட்கள்:
  • சர்க்கரை 60 கிராம்
  • முட்டை 4
  • வனிலா எஸன்ஸ் 3 டீஸ்பூன்
  • ஒரு சிறு துளி உப்பு
  • மைதா 200 கிராம்
  • பால் 500 மில்லி
  • தண்ணீர் 60 மில்லி
  • வெண்ணெய் உருக்கியது 20 கிராம்

செய்முறை:

1)முதலில் முட்டையை  ஒரு பவுலில் உடைத்து  ஊற்றி, அதிலேயே சர்க்கரை,வனிலா எஸன்ஸ்,உப்பு எல்லாம் போடவும்.







2)நன்றாக நுரைப்பொங்க அடிக்கவும்.




3)நுரைப்பொங்க அடித்த பிறகு,அதில் மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக 





போட்டு கலக்கவும்.கட்டி,முட்டி இல்லாமல் கலக்கவும்.



4)கலந்தவுடன் அதில் தண்ணீரும் பாலும் கொஞ்சம் கொஞ்சாக ஊற்றி கலக்கவும்.






எல்லாவற்றையும் போட்டு கலந்தால் மாவு நன்றாக வாராது.




5)உருக்கி வைத்திருக்கும் வெண்ணெய்யை அதில் ஊற்றிய பிறகு மீண்டும் நன்றாக கலந்து விடவும்.





எல்லாவற்றையும் கலந்து வைத்து விட்டோம் அல்லவா?

6)அந்த கலந்த மாவை அப்படியே 1 அல்லது 2 மணி நேரமாவது வைக்கவும். அவரம் என்றால் ஒரு அரை மணி நேரமாவது வைத்து செய்தால் நன்றாக இருக்கும்.
7)2 மணி நேரம் சென்றதும் தோசைக்கல்லை காய வைத்து மாவை ஊற்றி 





மெல்லிய தோசையாக தேய்க்கவும்.மொத்தமாக இருக்கக்கூடாது.




8)நன்றாக சிவக்க விடுங்கள்.

எண்ணெய் ஊற்ற தேவையில்லை.

9)ஒரு பக்கம் சிவந்ததும்




அடுத்த பக்கம் திருப்பி போடுங்கள். அதுவும் சிவந்தவுடன் தோசைக்கல்லிருந்து எடுத்து விடவும்.


     க்ரேப் ரெடியாகி விட்டது. இப்போது பிள்ளைகளை அழைத்து கொடுங்கள். இதில் சர்க்கரை இருப்பதால், அப்படியேக்கூட சாப்பிடுவார்கள். அல்லது வெறும் சர்க்கரை க்ரேப் மேலே போட்டுக்கூட கொடுக்கலாம்.







copyright©Oct2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts