Citron relaxant/புத்துணர்ச்சி கொடுக்கும் எலுமிச்சை ஸ்முத்தி





     காலை நேரத்தில் வைட்டமின் சி கொடுக்கும்  எலுமிச்சைப்பழ ஸ்முத்தி.
இது கொஞ்சம் புளிப்பும் இனிப்பும் கலந்தது.

      சில்லென்று இருக்கும் இந்த ஸ்முத்தி வெயில் காலத்தில் குடிக்க நன்றாக இருக்கும்.

இதற்கு வேண்டிய பொருள்கள்:
  • 1 பெரிய எலுமிச்சை பழம்
  •  சின்னதாக இருந்தால் 2 பழம்
  • 4 - 6 எலுமிச்சைப்பழ சொர்பே/Sorbet
  • 2 - 3 மேஜைக்கரண்டி சர்க்கரை
  • 500 மில்லி  தண்ணீர்


ஸ்முத்தி மிக்ஸியில் கலக்கும் முறை:

1)எலுமிச்சைப்பழத்தை சாறு பிழிந்து வைத்துக்கொள்ளவும்.

2)ஒரு ப்ளன்டரில் எலுமிச்சைச்சாறு,சர்க்கரை,சொர்பே/sorbet,தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் 2 நிமிடம் ஓடவிடுங்கள்.

ஸ்முத்தி செய்து முடிந்து விட்டது. ஒரு டம்ளரில் ஊற்றிக்குடிங்க.

      உங்களுக்கு புளிப்பு வேண்டும் என்றால், எலுமிச்சைப்பழம் 1 கூடுதலாக போட்டுக்கொள்ளலாம்.
மிகவும் புளிப்பு இருந்தால் தண்ணீர் கொஞ்சம் அதிகமாக ஊற்றிக்கொள்ளலாம்.






copyright©Oct2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts