carottes râpée en salade/ துருவிய கேரட் சல்லாது



       
       இந்த சல்லாது சின்ன பிள்ளைகளுக்காக செய்து இருக்கிறேன்

      இது மாதிரி சமைக்காத,துருவிய காய்கறிகள் சிலவற்றை சல்லாதாக  2 அல்லது 3 வயதிலிருந்து கொடுக்கலாம். அதாவது பிள்ளைகளுக்கு மென்று சாப்பிடும் அளவுக்கு பற்கள் இருந்தால் போதும். அப்படி பற்கள் குறைவாக இருந்தால் கொடுக்க வேண்டாம்.

      அதனால்தான் இந்த சல்லாதில் சோஸ் சிம்பிள்ளாக உள்ளது.

     நாமும் இந்த சல்லாதை சாப்பிடலாம். Diet/டைட் டைட் செய்பவர்களும் இந்த சல்லாதை சாப்பிடலாம். இது உடம்பு இளைக்க பயன்படும்.

      இந்த சோஸ் பிடிக்கவில்லை என்றால்,வேறு சோஸ் பிறகு சொல்லிக்கொடுக்கிறேன்.

வேண்டிய பொருட்கள்:

  • துருவிய கேரட் 500 கிராம்
  • எலுமிச்சை பழச்சாறு 4 மேஜைக்கரண்டி
  • ஆலிவ் எண்ணெய் 6 மேஜைக்கரண்டி
  • உப்பு மிளகுத்தூள்
  • பெர்சில்

செய்முறை:

1)கேரட்டை துருவி வைத்துக்கொள்ளவும்.

2)எலுமிச்சை பழச்சாறு,எண்ணெய்,மிளகுத்தூள் எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.


3)கேரட்டுடன் தயாரித்து வைத்திருக்கும் சோஸ்ஸை ஊற்றி கிளறவும்.


கேரட் சல்லாது ரெடி.
இது Diet/டைட்டுக்கும் நல்லது.
இது மிகவும் சுலபமானது. செய்துத்தான் பாருங்களேன்


copyright@oct2014 kolly2wood.blogspot.com


Comments

Popular Posts