Rouleaux de printemps / Gỏi cuốn/ஸ்பிரிங் ரோல்





     இது வியட்நாம் நாட்டில் செய்வது. இந்த Rouleaux de printemps    வெயில் நாட்களில் சாப்பிட்டால் எனக்கு மிகவும் பிடிக்கும். எல்லோருக்கும் அப்படித்தான் பிடிக்கும். இது செய்தவுடனே சாப்பிட வேண்டும்.

      அப்பொழுதுதான் ருசியாக இருக்கும்.செய்து வைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்தும் சாப்பிடலாம்.

      லஞ்ச் க்கு இதை மட்டும்கூட எடுத்து செல்லலாம்.

இதற்கு தேவையானது:

2 பேருக்கு இது போதும்
  • 4  அரிசியால் ஆன அப்பளம்/Rice paper/galettes de riz 18 cm.
  • 2 இறால் சின்ன இறாலாக இருந்தால் 4
  • 50 - 100 கிராம் எலும்பு இல்லாத கறி கோழி,ஆடு அல்லது போர்க்.
  • 50 - 100 கிராம் இடியாப்பம் போன்ற சேமியா/Rice  vermicellli/vermicelli de riz
  • 4 லச்சு இலை/laitue leaves/feuilles de laitue
  • 100 கிராம் முளைக்கட்டிய பச்சைப்பயிர்/ germes de soja
  • புதினா/கொத்தமல்லி/தாய்லத்து துளசி

* அரிசியாலான அப்பளமும்,அரிசி சேமியாவும்  சீன,வியாட்நாமின் கடையில் கிடைக்கும்.அல்லது சுப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும்




உங்களுக்கு வேண்டும் என்றால் கேரட் துருவியது.

இப்போது ஸ்ப்ரிங் ரோல் செய்யலாமா?

1)முதலில் தண்ணீர் சுடவைத்து,அதில் சேமியாவை வேகவைக்கவும். வடித்து ,தண்ணீரால் கழுவ வேண்டும்.

2)கறியை கொஞ்சமாக இஞ்சி,மிளகுத்தூள்,உப்பு எல்லாம் போட்டு வேகவைத்துக்கொள்ளலாம்.

3)இறாலை வேகவைத்துக்கொள்ளுங்கள்.

4)ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை கை பொறுக்கும்அளவு  சூடுப்படித்திக்கொள்ளலாம்.

5)கறியை பித்து வைத்துக்கொள்ளுங்கள்.

6)இறாலை சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ளவும்.

7)சல்லாது இலையை கழுவி வைத்துக்கொள்ளுங்கள்.

8)ஒரு ஈரத்துணியை ஒரு மேஜையில் வைத்துக்கொள்ளுங்கள்.

9)ஒரு அரிசி அப்பளத்தை சுடுத்தண்ணீரில் நனைத்து,ஈரத்துணியை பரப்பி வைத்திருக்கிறோம அல்லவாஅதில் வைக்க வேண்டும்.

10)நாம் தயாரித்து வைத்து இருக்கிறோம் அல்லவா? இறால்,பச்சைப்பயிர் முலைக்கட்டியது,வேகவைத்த கறி,சேமியா,சல்லாது இலை,புதினா எல்லாம் ஒரு ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொள்ள்ங்கள்.

11)அப்பளத்தில் ஈரத்துணியில் வைத்து,முதலில் சல்லாது இல்லை வைக்கவேண்டும்.

12)பிறகு,சேமியாவை வைக்கவேண்டும்.




     அதன் மேல் கறியை வைக்கவும்.அதன் மேல்,முளைக்கட்டிய பச்சைப்பருப்பை வைக்கவும்.



13)இதற்கு மேல் புறமாக இறாலையும அதன் மேல் புதினா வைக்கவும்.





அப்பளத்தை மடிக்க ஆரம்பியுங்கள்.

14)முதலில் சல்லாது இலைப்பக்கமாக் இருக்கும் அப்பளத்தை கறி எல்லாம் வைத்து இருக்கிறோம் அல்லவா?அதன் மேல் போடவும்.. 

15)அதன் பிறகு, பக்கவாட்டில் இருக்கும் அப்பளத்தை அதன் மேல் போடவும்.
பிறகு,அதனை நம் எதிர்பக்கமாக சுற்றவும்.





16).கொஞ்சம் இறுக்கமாக சுற்றவும். அதற்காக அப்பளம் கிழிய அழுத்தம் வேண்டாம்.






        நன்றாக சுற்ற வேண்டும்.
அவ்வளவுத்தான்.சாப்பிட வேண்டும்.

     முதலில் அப்பளத்தை சுற்றுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.
அப்பளம் கிழியும், அதற்காக மனதை தளர விடவேண்டாம்.
செய்ய செய்ய சுற்றுவது வந்துவிடும்.
Bon appétit !
 copyright©Sep2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts