Beer Bread/ பீர் ரொட்டி





ரொம்போ நாளா நான் MAP*  ல் ரொட்டி செய்யவே இல்லை. இந்த ரொட்டியை அதில் செய்யலாம் என்று அதில் செய்தேன்.
இதில் செய்தால் ஒரு சுலபம்.நாம் மாவு பிசைய வேண்டும் என்று தேவையில்லை. எல்லாமே பார்த்துக்கொள்ளும்.
இதையே சாதாரண முறையில் செய்வது என்றாலும் செய்யலாம்.

*Machine a Pain


இதற்கு தேவையானது:
  • மைதா மாவு  350 கிராம்
  • கோதுமை மாவு 150 கிராம்
  • எண்ணெய்  2 மேஜைக்கரண்டி
  • தேன் 2 மேஜைக்கரண்டி
  • ஈஸ்ட் 1 1/2 டீஸ்பூன் (dry yeast)
  • உப்பு 1 1/2 டீஸ்பூன்
  • 285 மில்லி பீர் ( biére sans alcol)

சாதாரண பீர் கூட உபயோகப்படுத்தலாம்

செய்முறை:

MAPல் செய்யும் முறை:

MAP என்றால் முதலில் பீர்,




மைதா மாவு,கோதுமை மாவு,




ஈஸ்ட்,உப்பு,தேன்,எண்ணெய்




இந்த வரிசையில் ரொட்டி செய்யும் மஷினில் போடவும். Whole wheat program ல் வைக்கவும்.ரொட்டி தயாரனதும் தானாகவே நின்றுவிடும்.





கையால் செய்யும் முறை:
1)மாவில் உப்பு,ஈஸ்ட்,பீர்,தேன்,எண்ணெய் எல்லாவற்றையும் போட்டு நன்றாக பிசைந்து துணி போட்டு அப்படியே வைக்கவும்.

2)மாவு புளித்து இரண்டு மடங்காக ஆகும்.

3)மீண்டும் பிசைந்து, அவணில் வைக்கும் தட்டில் வைக்கவும்.

4)மீண்டும்,துணி போட்டு மூடி வைக்கவும்.நன்றாக உப்பி வரும்.

5)அதற்குள் அவணை முற்சூடு செய்யவும். 220°c

6)இரண்டு மடங்கு ஆனதும் மாவை அவணில் வைக்கவும்.

7)25 - 30 நிமிடங்கள் அவணில் வேகவிடவும். வெந்ததும் எடுத்து சாப்பிடுங்கள்.

Copyright Sep2014©kolly2wood.blogspot.com

Comments

Popular Posts