அஞ்சரைப்பெட்டியின் ரகசியங்கள்







வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை?-மங்காத
சீரகத்தைத் தந்தீரேல்,தேடேன் பெருங்காயம்!
ஏரகத்துச் செட்டியாரே!

      இது சிலேடை பாடல். இந்த பாடலை எனக்கு 5ஆம் வகுப்பிலோ 6ஆம் வகுப்பிலோ சொல்லிக்கொடுத்தார்கள்.
இந்த பாடலில் பலசரக்கு கடையில் விற்கும் சாமான்கள் இருப்பதாகவும்,செட்டியாரை பார்த்து ஏதோ கேட்பதைப்போல் இருக்கிறது.
ஆனாலும் இது முருகனை பார்த்து பாடப்பட்ட பாடல்.

      அந்தநாளில் சொல்லுவர்கள் வீட்டில் உள்ளவர்களின் உடல்நலம் அஞ்சரைப்பெட்டியில் இருக்கிறது என்று.

       அதனை நம்மில் பலரும் மறந்து விட்டோம்.இன்று மருந்து மாத்திரைகளை நம்பி வாழ்கிறோம். மருந்தும் சாப்பிடவேண்டும்,அவசியம் என்றால். இயற்கை மருந்தும் வேண்டும்.இது பக்கவிளைவுகள் இருக்காது.

       இங்கு நான் வந்த பிறகு bio பொருட்களை உபயோகப்படுத்துவர்களும்,வயதானவர்களும் நம் நாடு போலவே நிறைய கைவைத்தியங்கள் செய்கிறார்கள் என்று புரிந்துக்கொண்டேன். இங்கு மண்சிகிச்சைகளும் உண்டு.

       நான் இந்திய சாப்பாடு செய்யும்போது இங்கு இருக்கும் இந்நாட்டு நண்பர்கள்:எதற்காக உங்கள் சாப்பாட்டில் இவ்வளவு மசாலா பொருட்கள் சேர்கிறீர்கள்? என்று கேட்பார்கள்.

      நான் அவர்களுக்கு எடுத்து சொல்லுவேன் எதற்காக இவ்வளவு மசாலா சாமான்கள் என்று:

முதலில்,எங்கள் நாட்டில் அதிகமான மசாலாவிற்கு ஏற்ற பொருட்கள் விளைகிறது. அதனால்தான் என்பேன்.

பிறகு,எங்கள் ஊரில் எப்போதும் உடல்நலத்தை நினைத்தே சாப்பாடு செய்வார்கள். மசாலாகள் வெறும் வாசனையும் காரத்திற்காக மட்டும் கிடையாது. அதில் உடல்நலத்திற்கு நன்மை தரக்கூடியது நிறைய இருக்கிறது என்பேன்.

       எனக்கு தெரிந்த மசாலா பொருட்களும் அதன் பயன்பாடுகளும்.அதன் பண்புகளும் என்ன என்பதை உங்களுடனும் நான் பகிர்ந்துக்கொள்கிறேன்.



மஞ்சள்


      கஸ்தூரி மஞ்சளும்,குண்டாக இருக்கும் மஞ்சளும் பெண்கள் அழகுக்காக உபயோக படுத்துவது.

     மங்கல பொருளாக விளங்குவது நம் நாட்டில் மஞ்சள்தானே. மஞ்சள் பூசி குளித்தாலே ஒரு அழகுத்தான்.




தூளாகவும் இழைத்தும் பயன்ப்படுத்துகிறோம்.






      விரலி மஞ்சள்தான் நாம் மசாலா பொருட்களுக்கு போடுவது.
மஞ்சளை தூளாக பயன்படுத்துகிறோம் .

மஞ்சள் நல்ல கிருமி நாசினி.
சிறு காயம் இருந்தாலும் அதற்கு மஞ்சள் வைத்தால் சுகமாகும்.
கொழுப்பை தடுகிறது.சில புற்று நோய்களுக்கும் நல்லது, ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

இது கறி,மீன்,காய்கறி செய்யும் போது மிகவும் உபயோகப்படுத்துவோம்.
இது செரிமானத்திற்கு நல்லது.நாம் மிளக்காய் போன்ற காரம் உபயோகப்படுத்தும்போது வயிற்றுக்கு கெடுத்தல் வராது காக்க கூடியது


இஞ்சி

     இஞ்சியை பொறுத்தவரை அது கயாமல் இருந்தாலும் உபயோகப்படும். காய்ந்து சுக்காகவும் உபயோகப்படும்.

      இஞ்சியை பொடியாக வெடியும்,அரைத்தும் பயன்படுத்துகிறோம்.

      சுக்கை பெரும்பாலும் இடித்தும்,தூளாகவும் பயன்படுத்துகிறோம்.

       இஞ்சி ஆயுர்வேதத்தில் சில நோய்களுக்கு  ஒத்தடம் கொடுக்ககூட பயன்படுத்துகிறார்கள்.


     

      இது பித்தம்,வாந்தி,சளி,செரிமானம் எல்லாவற்றிற்கும் நல்லது. அதனால்தான் பஸ்ஸில் கூட இஞ்சிமொறப்பா வாந்தி எடுக்காமல் இருக்க விற்கிறார்கள்.

      கறி குழம்பில் பெரும்பாலும் நாம் உபயோகப்படுத்துகிறோம். கறி செரிப்பது கடினம். அதிலும் தேங்காபால் எல்லாம் போட்டால் இன்னும் கடினம். ருசியும் கொடுக்கிறது. அதனால் இஞ்சி போடுகிறோம்.
இஞ்சி ஊறுக்காய், இஞ்சி சேர்த்து செய்யும் ஊறுக்காய் !!!! சொல்லும் போதே நாக்கு ஊறுகிறது.

      சுக்கும் இஞ்சியை போன்ற குணம்தான். இஞ்சியை காய வைத்ததுதானே!

      இது பெரும்பாலும் தூளாக பயன்படுத்துகிறார்கள்.

      இது வாயுதொல்லைக்கு மிகவும் நல்லது. அந்த நாட்களில் சுக்குக்காபி எங்கு பார்த்தாலும் விற்கும்.இப்போது அதை காணவில்லை.

      இஞ்சியை போலவே சுக்கிலும் குழம்பு வைக்கலாம். பிள்ளைப்பெற்ற பெண்களுக்கு சுக்கு சேர்த்து குழம்பு கொடுப்பார்கள்.

பூண்டு

      தினம் பூண்டு சாப்பிட்டால் 100 வயதுவரை வாழலாம்..... மொழியில் பிரகாஷ்ராஜ் வசனம்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

     பூண்டை உரித்து அப்படியே சாப்பிடுவார்கள். சுட்டு சாப்பிடுவார்கள். அரைத்தும் சாப்பிடுகிறார்கள். வேகவைத்தும் சாப்பிடலாம்.


   

       அதிகமான இரத்த அழுத்தத்திற்கு,கொழுப்பு குறைய,வயிற்று வலி,செரிமானம்,மூலம், கேன்ஸர்,ஊளை சதை குறைய எல்லாவற்றிக்கும் நல்லது.

     தாய்பாலை அதிகம் ஆக்கும்.

    இதனை அரைத்தும்,அரிந்தும்,முழுவதுமாகவும் பயன்படுத்தலாம்.
     
      இதில் ரசம்,குழம்பு,ஊறுக்காய் எல்லாம் செய்யலாம்.
சில சமையலுக்கு கடைசியாக பூண்டை நசுக்கி போட்டால் நன்றாக இருக்கும்.


புளி

      இது இந்தியாவில் பல ஆண்டுகளாக உபயோகத்தில் உள்ளது.
இது நம் நாட்டு அருசுவையில் ஒன்று

       புளியில் நிறைய நல்ல நோய் தடுப்பு சக்தி இருக்கிறது.

      இது வயற்றிக்கு நல்லது கிடையாது என்று சொல்லுவார்கள். அது தவறான அப்பிராயம். இது செரிக்கும் தன்மை மிக்கது. அதனால் தானே என்ன சாப்பாடு என்றாலும் கடைசியாக ரசத்தை சாப்பிடுகிறோம். அதிகமானால்தான் நல்லது இல்லை. எல்லாமே அப்படித்தானே!

       வாந்தி வருவதுப்போல் இருந்தால் புளியை வாயில் அடக்கினால் நன்றாக இருக்கும் புளிப்பாக.



      யாராவது விஷம் சாப்பிட்டால் உடனே உதவுவது புளியும் உப்பும்தானே!

      புளியின் கொட்டை,இலை,பூ எல்லாமே மருத்துவ குணம் உடையது.
இது தண்ணீரில் கரைத்தும்,அப்படியே அரைத்தும் பயன்படுத்தபடுகிறது.
இதில் குழம்பு,ரசம் வைக்கலாம்காய்கறி,மீன்,கறியுடன் நன்றாக 
ஒத்து போகும்ஊறுக்காயிலும் சேர்த்து அரைக்கலாம்.

      புளியில் இங்கு ஜாம் செய்கிறார்கள்மருந்துக்கடைகளில் மருந்தாக 
விற்கிறார்கள்கிறிஸ்மஸ் போன்ற விழா நாட்களில் நிறைய வியாபாரம் ஆகும்.
ஏன் என்றால்அப்போதுதானேநிறைய சாப்பிடுவர்கள்வயற்று கோளாறு வரும்.
அதனால்தான்

      புளியாங்கொட்டை நமக்கு மருந்து மட்டும் அல்ல. விளையாடவும் பயன்படுகிறது அல்லவா!சுக்கரக்காய்,பல்லாங்குழி..


மிளகு

     இது இந்தியாவின் நறுமணப்பொருட்களில் தலைமை வகிக்கிறதுஇது தென் இந்தியாவில்  கேரளாவில் பயிரிடப்படுகிறது.

     மிளகில் மூன்று வகையாக விற்கிறார்கள். கருப்பு மிளகு,வெள்ளை மிளகு,சிகப்பு மிளகு.



     
     மிளக்காய் நம் நாட்டு பொருள் கிடையாது.நடுவில் வந்ததுதான்

      வெள்ளையர்கள் நம் நாட்டுக்குவந்ததே மிளகு போன்ற நறுமணப்பொருள்களுக்காகத்தான்.
மிளகை தூள்ளாகவும் பயன்படுத்தலாம்.முழுதாகவும் பயன்படுத்தலாம்.அரைத்தும் பயப்படுத்தலாம்.

       இது உணவில் உள்ள நச்சுத்தன்மையை போக்கும்.
மிளகு காரம் வயிற்றுக்கு கெடுதல் அதிகம் கிடையாது.
மிளகு செடியில் உள்ள அத்தனையும் மருத்துவ குணம் உடையது.

    அதனால்தானோ என்னவோ மிளகின் விலை கிடுகிடு விலை ஏற்றமாக 
இருக்கிறது.

      இதில் செரிமான சக்தி இருக்கிறது.ஊளைச்சதையை குறைக்கிறது


நரம்புத்தளர்ச்சி,சளி,காய்ச்சலுக்கு நல்லதுஇது இதய நோய் வருவதை தடுக்கிறதுஊட்ட சத்தும் கொடுகிறது.

      செட்டி நாட்டு சமையலில் அதிகமாக பயன்படுத்துவார்கள்.

      மிளகு குழம்பு,ரசம்,மீன் , முட்டை குழம்பு,கறிக்குழம்பு,வாத்துக்கறி குழம்பு ரொம்பவும் நன்றாக இருக்கும். பச்சை மிளகு ஊறுக்காய் போடவும் உதவுகிறது .
  


இன்னும் மணக்கும்

Comments

Popular Posts