Amuse bouche frais brochettes/ ஃப்ரஷ் ப்ரோஷத்/Fresh brochettes





     இந்தமாதிரி ப்ரோஷத் விருந்தினருக்கு செய்து கொடுக்கலாம். பிள்ளைகள் பிக்னிக் போகும்போது செய்துக்கொடுக்கலாம்.
இதுமாதிரி செய்து கொடுத்தால்,பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதற்கு தேவையான பொருள்கள்:
  • ஹேம்/Ham/Jambon
  • சீஸ்/gruyére
  • மொஸரலா சீஸ்/Mozzarella
  • சின்ன தக்காளி


சல்லாது இலை அலங்கரிக்க
பல் குத்தும் குச்சிகள்

செய்முறை:
1)சல்லாது இலையை நன்றாக கழுவவும்.

2)சீஸ் இரண்டையும் கட்டம் கட்டமாக வெட்டிக்கொள்ளவும்.ஹேம்மையும் கட்டமாக வெட்டிக்கொள்ளவும்.

3)தக்காளியை பாதியாக வெட்டவும்.

4)பல் குத்தும் குச்சியில் முதலில் சீஸ்ஸை குத்தவும். பிறகு ஹேம்மை குத்தவும்.

5)  பிறகு மொஸரலா சீஸ்ஸை குத்தவும்.

6)  கடைசியாக தக்காளியை குத்தி விடவும்.

ப்ரோஷத் ரெடி.

7)சல்லாது இலையை ஒரு தட்டில் வெட்டி வைத்து விட்டவும்.

8)அந்த சல்லாது இலையின் மீது ப்ரோஷத்தை வைத்து அலங்கரிக்கவும்.

/sauce vinaigrette,கெச்சப் போன்ற சாஸ்ஸுடன் விருந்தினருடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

 Copyright Sep2014©kolly2wood.blogspot.com

Comments

Popular Posts