மீன் பத்தே/Paté de poisson au thon






இந்த மீன் பத்தே செய்வது மிகவும் சுலபம். ரொம்போ வேலை கிடையாது.

     இது ஸ்டாட்டராக வைத்துக்கொள்ளலாம். இரவு சாப்பாடிற்கு மீன் பத்தேவுடன் சல்லாது இலையுடன் ஏதாவது ஒரு சல்லாது செய்து  சாப்பிடலாம். அதுவே போதும்.

இதற்கு தேவையான பொருள்கள்:


  • தோன் மீன் டின்/Boîtes de thon au naturel 2
  • ஃப்ரஸ் கீரிம்/fresh cream 200 மில்லி
  • மஸ்ட்ர்ட்/Moutarde de dijon 1 தேக்கரண்டி
  • மைதா அல்லது சோளமாவு/corn flour 3 டேபிள் ஸ்பூன்
  • முட்டை 3
  • துருவிய சீஸ் 100 200 கிராம்
  • பூண்டு 3 பல்
  • உப்பு,மிளகுத்தூள்


 செய்முறை

பாத் ப்ரிஸே செய்துக்கொள்ளவும்.




1)முட்டையை ஒரு பவுலில் உடைத்து ஊற்றவும்.நன்றாக கலந்து விட்டு ஃப்ரஸ் கீரிம் ஊற்றி முட்டையுடன் சேர்த்து அடிக்கவும்.

2)அதிலேயே மஸ்ட்ர்ட்டை போட்டு அதையும் நன்றாக கலந்து விடவும்.




3)பிறகு துருவிய சீஸையும் நசுக்கி வைத்திருக்கும் பூண்டையும் அதில் போட்டு கலந்து விடவும்.

4)உப்புத்தூள்,மிளகுத்தூள் போட்டு கலந்து விட்டவும்.

5)இது கலந்து விட்டு அதிலேயே மீனை உதிர்த்து போடவும்.





6)மீனையும் அதில் நன்றாக கலந்து விட்டு வைத்துவிடுங்கள்.




7)பாத் ப்ரிசே செய்து வைத்து இருக்கிறோம் அல்லவா? அதனை ஒரு கேக் செய்யும் மோல்டில் பாத் ப்ரிசை விரித்து போடவும்.




8)அதன் நடுவில் நாம் செய்து வைத்து இருக்கும் மீனின் கலவையை ஊற்றவும்.




9)மீன் கலவையை ஊற்றியதும் பாத் ப்ரிஸேவை மூடிவிடவும்.




10)அவணை முற்சூடு செய்யவும் 190°யில்.

11)தயாரித்து வைத்திருக்கும்  பத்தேவை அவணில் 25 - 30 நிமிடங்கள் வேக வைக்கவும்.




12)வெந்த பின்பு வெளியே எடுத்து சூடாக சாப்பிடவும்.
copyright©Sep2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts