நம் வீட்டு விழாகள்! கொண்டாட்டங்கள் ! - ஒரு அலசல்






       விழா,கொண்டாட்டம்  எல்லாம் நம் வாழ்க்கையில் எப்போதும் வரும். நம் நாட்டில் இது கொண்டாடுவது ஒரு போட்டியில் நடக்கிறது. சிறப்பாக செய்கிறேன் என்று பணத்தை வாரி இரைக்கிறார்கள். இது தேவைதானா என்று அவர் அவர்கள் அவர்களையே கேட்டு கொண்டார்களா? என்று தெரியவில்லை.

      விழாக்கள் கொண்டாட வேண்டியதுதான். திருமணம், பிறந்தநாள் எதுவாய் இருந்தாலும் எக்கச்சக்கமான கும்பளை கூட்டிவிட்டு சத்தமாக் பாட்டை போட்டு விட்டு வந்தவர்களிடம் வாங்க,சாப்டிங்களா?ரொம்போ த்யேங்க்ஸ் போயிட்டு வாங்க. இதுதான் பேச முடியும். வாங்க போட்டோ பிடித்துக்கொள்ளலாம். இவ்வளவுதான் நாம் வந்தவர்களிடம் பேசுவது.

முதலில் இசைக்கு வருகிறேன்:

      சத்தாமான பாட்டில் மற்றவர்களிடம் நாம் பேசக்கூட முடியாத நிலை.பாட்டு கச்சேரி செய்பவர்கள் கொஞ்சம் யோசித்து நடந்துக்கொள்ள வேண்டும்.

       திருமணத்திற்கு வருபவர்கள் புதுமணத்தம்பதியரை வாழ்த்த மட்டும் வருவது கிடையாது.

        நீண்ட நாள்களாக பார்க்காத நண்பர்களையும் உறவுகளையும் பார்க்கலாம் என்றும் வருவார்கள். அவர்கள் பேச்சு சுதந்திரம் இல்லாமல் செய்கிறார்கள்.

       பாட்டு கச்சேரி செய்பவர்கள். மெல்லிசை என்றுதான் பெயர். இசை என்பது மென்மையாக இருக்க வேண்டும் என்று பாட்டு பாடும் குழுவினர்களுக்கு தெரிய வேண்டும்.அடுத்தவர்களின் காதுகளை செவிடாக்க கூடாது.

        பாட்டை கேட்க வேண்டும் என்ற ஆசை வரவேண்டுமே தவிர,ஏன் இந்த பாட்டு கச்சேரி வைத்தார்களோ என்ற எண்ணம் வரக்கூடாது.


கொண்டாடும் இடம்:

      அதிகமான நண்பர்களையும் உறவுகளையும் கூப்பிடுவது நம் நாட்டு பழக்கமாக போய் விட்டது.

      அதற்கு முன்பு வீட்டில் தான் கல்யாணம் மற்ற விழாக்கள் நடந்தது

       நெருங்கிய உறவுகளும்,சில நண்பர்களை மட்டுமே அழைப்பார்கள். திருமணம் என்றால் 1 வாரம் கூட நடக்கும்.

        எல்லோரிடமும் பேசி கலகலப்பாக இருப்பார்கள்.பிள்ளைகள் ஒருபுறம் விளையாடும். திருமணம் முடிந்ததும் தம்பதியர்களுக்கு விளையாட்டு, பிறகு,சொக்கட்டான் இப்படி விளையாட்டு விளையாடுவார்கள்.


       

திருமணம் என்றால் அமைதியாக சந்தோஷமாக நடக்கும். இது திருமணம்.

       பிறந்த நாள் என்றாலும் இப்படிதான். எந்த ஒரு விழா என்றாலும் வீட்டில் தான் நடக்கும். அவர்கள் வீடு சின்னதாக இருந்தால்,அவர்களின் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீடு பெரியதாக இருந்தால் அதில் விழா செய்வார்கள்.

      சித்தியின் கல்யாணம் வரை இப்படித்தான் நடந்தது. பிறகு தான் திருமண மண்டபம் எல்லாம் வந்தது.


விருந்தினர்:

       அதிகமான பேரை அழைத்து என்ன செய்ய போகிறோம் ? தினறி திண்டாடுவது நாம்தானே !

       இதை விட ஏறியது 100 பேருக்கு கூப்பிடலாம். அப்போதுதான் எல்லாரிடமும் பேசமுடியும். உபசரிக்கவும் முடியும். இதுவே கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஆனாலும் சமாளிக்கலாம்.

       அதிகம் பேர் என்றால் ஒரு பெரிய சங்கடம் இருக்கிறது.
வந்து இருக்கும் உறவு முறைகளையும், நண்பர்களையும் பெற்றவர்கள் அறிமுகம் செய்ய நேரம் இருக்காது. புதுமண தம்பதியர்களுக்கும் நிறைய பேரை தெரியாது. அவர்கள் கொடுக்கும் பரிசு பொருட்களை மட்டுமே வாங்கி கொண்டு, பரிசு பொருட்கள் கொடுப்பவர்கள் யார் என்று தெரியாமல் அசட்டு சிரிப்பு சிரித்து வைப்பார்கள். இது தேவையா?

       அதை விட குறைவான பேரை கூப்பிட்டு, வந்தவர்களை நன்றாக உபசரித்து, அவர்களுடன் பேசி,புதுமண தம்பதியர்களுக்கு அறிமுக படுத்தி வைத்தால் நல்லது இல்லையா?


       

      பிறந்த நாள் விழா என்றாலும், அதிகம் பேரை கூப்பிட்டால்,குழந்தைக்கு பயமாக இருக்கும். அதை விட அதற்கு பிடித்தவரகளை மட்டுமே கூப்பிட்டால் அது சந்தோஷப்படும்.

       எப்படியும் பிறந்தநாளுக்கு உறவினர்களை விட நண்பர்களுடன் கொண்டாடுவதைதான் பிள்ளைகள் விரும்புவார்கள். பிறந்தநாள் அன்று பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருப்பதை தானே நாம் விரும்ப வேண்டும். பிள்ளைகள் சந்தோஷம் தானே நம் சந்தோஷம்.


அடுத்தது சாப்பாடு:

        பல விழாக்களில் அதிகம் பேரை கூப்பிடுவது மிகவும் சுலபம்.
சாப்பாடு செய்து விடுவோம். முதல் 2 பந்திக்கு சாப்பாடு இருக்கும். 3வது பந்தியிலிருந்து செய்து வைத்திருக்கும் மெனுவில் ஒவ்வொன்றாய் குறைந்து, கடைசி 2 பந்திக்கு ஒன்று இல்லாமல் கூட போவது உண்டு.

        வந்த விருந்தினரை வயிறார சாப்பாடு போடுவது தானே நல்லது.அதை விட்டு விட்டு இப்படி செய்வது தவறு அல்லவா?


       

      வரும் விருந்தினரும், பந்தியில் இருப்பதை சாப்பிட்டு விட்டு போக வேண்டும். அதை விட்டுவிட்டு அப்படியே இலையில் வைத்ததை வீணாக்கி விட்டு போனால் சரியா?

        ஒரு விழா என்றால் எவ்வளவு செலவு செய்கிறார்கள்? அதை யோசிக்க வேண்டும்.

       பந்தி பரிமாறுவர்களும்,சாப்பிடுவர்களை கேட்டு கேட்டு பரிமார வேண்டும். விருந்தினர் வருவதற்கு முன்பே இலையில் பரிமாறிவிட்டு போய்விட்டால், அவர்களுக்கு எது பிடிக்கும்,எது பிடிக்காது என்று எப்படி தெரியும்?

        அதனாலும் சாப்பாடு வீணாகும்.

         விருந்தினரும் வேண்டும் என்பதை மட்டும் கேட்க வேண்டும்.
பரிமாறுவர் பரிமாறும் போது கொஞ்சமாக வைக்க வேண்டும். திரும்பவும் கேட்டால் இது போதுமா? என்று கேட்டு வைக்க வேண்டும். இப்படி செய்தால் சாப்பாடு வீணாகாது அல்லவா?

        சாப்பாடு மீதமாக இருந்தால் தயவுசெய்து அதை நல்ல அநாதை விடுதியோ,முதியோர் இல்லத்திலோ கொடுங்கள்.


போட்டி போட வேண்டாம்:

        மனிதனாக பிறந்து விட்டோம் என்ன செய்வது? நம்மிடம் போட்டியும் பொறாமையும் இருக்கிறது. சிலருக்கு கொஞ்சமாக இருக்கிறது. சிலருக்கு அதிகமாக இருக்கிறது.



        

      விழா கொண்டாடும் போது, நம்மால் முடியுமா? என்று பார்த்து செய்ய வேண்டும். இதில் பணம் மட்டும் சொல்லவில்லை. வேலையும் தான். அதிகம் பணம் செலவு செய்யும் பேர்வழி என்று கடனை சுமக்க கூடாது.
வேலையையும் அதிகமாக இழுத்து போட்டுக்கொண்டு செய்து விட்டு,பிறகு முடியாமல் தினறக்கூடாது.

         எல்லாமே உங்களால் முடிந்தவரை மட்டுமே செய்ய வேண்டும். விழா முடியும் வரை சந்தோஷமாக இருந்து விட்டு. பிறகு கஷ்டப்படக்கூடாது.

         அவர்கள் வீட்டில் இதை செய்தார்கள் இதை விட நாம் அதிகமாக நாம் அதிகமாக செய்ய வேண்டும் என்று நினைக்க கூடாது. நம் பட்ஜட்டுக்கு தகுதாற் போல் செய்ய வேண்டும். உடம்பு ஒத்துழைக்குமா? என்றும் பார்க்க வேண்டும்.  நமக்கு இது முடியுமா? முடியாதா? என்று பல முறை யோசித்து செய்ய வேண்டும்.


உடை,அணிகலன்:

        விழாநாட்களில் பிள்ளைகளுக்கு பவுன் நகைகளை போட்டு விடாதீர்கள். அவர்களை அவ்வளவாக கவனிக்க முடியாது.

        நகை காணாமல் போன பிறகு பிள்ளைகளை திட்டி என்ன புண்ணியம்?

        கோயில் திருவிழாவின் போது நகைகளை அதிகமாக அணிந்துக்கொண்டு போகாதீர்கள்.

        புதுப்பெண் என்றாலே அத்தனை நகைகளையும் சினிமா தியேட்டர் முதல் விருந்தனர் வீடு வரை நகைகள் போட்ட படிதான் வருவார்கள்.

       விருந்தினர் வீட்டிற்கு சரி. சினிமா தியேட்டருக்கும் கடைக்கும் ஏன் நகை? சிம்பிள்ளாக வரக்கூடாதா?

        இப்படி வந்து விட்டு பிறகு ஏன் திருட்டு பயம் கொள்ள வேண்டும் ?


பிள்ளைகளையும் கவனியுங்கள் :

        எந்த விழா உங்கள் வீட்டில் செய்தாலும்,பிள்ளைகளுக்கு  என்று ஒரு இடம் ஏற்பாடு செய்யுங்கள்

        அவர்களை பார்த்துக்கொள்ள யாராவது ஏற்பாடு செய்யுங்கள். அவர்களுக்கு கலர் பென்சில்,படம் வரைய பென்சில்கள், விளையாட்டு பொருள்கள் எல்லாம் தயாரித்து கொள்ளுங்கள். சந்தோஷமாக விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.

        பிள்ளைகளை அழைத்துக்கொண்டு போகிறவர்கள், எப்போதும் அவர்களுக்கு ஒரு உடை கையில் எடுத்துக்கொண்டு போவது நல்லது. சாப்பிடும் போது எதையாவது உடையில் ஊற்றிகொண்டாலும் வேறு ஏதாவது ஒன்றுக்கும் உபயோகமாக இருக்கும்.


என் மனதில் பட்டது:

       விருந்தினர் அனைவரும்  தங்கள் வீட்டில் கொண்டாடும் விழா என்று நினைத்து செயல் படுங்கள்.


 எந்த காரணம் கொண்டும் குறைகளை கூறிக்கொண்டே இருக்காதீர்கள்
பணக்கஷ்டமும் மனக்கஷ்டமும் ஒன்றாக சேர்ந்து விடும்.

முடிந்த வரை நம்மாலான உதவிகளை செய்ய முயற்சி செய்யவேண்டும்.
       
     வந்த விருந்தினரையும் அவமரியாதை செய்யாதீர்கள்.
எல்லாம் மகிழ்சியாக முடியும்.

        விழாவை கலக்கலப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.
கொண்டாடத்தான் விழா. திண்டாட இல்லை.


இனியாவது ஏதாவது மாற்றம் வருமா?
copyright©Sep2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts