தாய்மை அனுபவம் 25




     நம் பிள்ளை பள்ளிக்கூடம் போகும் வயது வந்து விட்டது.பள்ளிக்கூடம் போகும் முன்பே நாம் பிள்ளைகளை தயார் செய்ய வேண்டும்.

     பிள்ளைகளுக்கு இரண்டரை வயதிலிருந்து சொல்லிக்கொடுக்க வேண்டும்.

      பள்ளிக்கூடத்தைப்பற்றி விளக்கமாக விளையாட்டாக சொல்லிக்கொடுக்க வேண்டும்.

      உங்களால் முடியும் என்றால், ஒருமுறைக்கு இருமுறை அந்த பள்ளிக்கு குழந்தைவுடன் சென்று டீச்சரிடம் குழந்தையை பேசவிடலாம்.
குழந்தை பள்ளிக்கு போகும்போது பயம் இல்லாமல் போகும்.

      முதலில் நீங்கள் பயம் இல்லாமல் இருக்க வேண்டும்.
பள்ளிக்கூடம் போகிறதே என்ன ஆகப்போகிறதோ?என்று நினைத்துக்கொண்டு இருக்கக்கூடாது.

     அதுப்போல் நீங்கள் நினைப்பதை குழந்தை உணரும். அதனால் அதுவும் பயப்படும்.

      நீங்கள் தைரியமாக இருந்தால்தான் குழந்தையும் சந்தோஷமாக போகும்.

     பள்ளிக்கூடம் போகும் பிள்ளைக்கு ஒரு பை தயாரித்து கொடுக்க வேண்டும். அதில் ஒரு மாற்று உடை இருக்க வேண்டும். அதற்கு பிடித்த பொம்மை வைத்து அனுப்பவும். அந்த பொம்மை ஆசிரியரின் சம்மததுடன் வைத்து அனுப்பவும்.

     அதனால்தான் முன்பே சொல்லி இருந்தேன். பிள்ளைக்கு தனியாக தனாகவே அதன் வேலைகளை செய்ய சொல்லிக்கொடுக்க வேண்டும்.

     மற்றப்பிள்ளைகளுடன் பழகவும் சொல்லிக்கொடுங்கள் என்று. அது தானாக டய்லேட் போகவும் சொல்லிக்கொடுத்து அனுப்புங்கள்.
இவை எல்லாம் தெரிந்தாலே பிள்ளைகள் பள்ளிக்கூடம் போவதை சந்தோஷமாக  நினைக்கும். போன அந்த நாளிலேயே நண்பர்களுடன் பழகி,யாராவது நண்பர்களாக பழக ஆரம்பிக்கும்.

     பள்ளியில் நண்பர்கள் கிடைத்தாலே பிள்ளைகள் பள்ளிக்கு விடுமுறை எடுக்கவே   தயங்கும்.

     பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும் முன் அதனிடம்:"நீ  பெரிய பிள்ளையா ஆயிட்ட பாத்தியா? பள்ளிக்கூடம் எல்லாம் போற. பாத்தியா எங்களால எல்லாம் உன்னை போல பள்ளிக்கூடம் போக முடியல.நீ கொடுத்து வைத்திருக்கிற. எனக்கு எல்லாம் கொடுத்து வைக்கவில்லை. உனக்கு நிறைய ப்ரன்ட்ஸ்/Friends கிடைப்பாங்க. ஜாலிதான் உனக்கு. பள்ளிக்கூடம் போகலான நிறைய ப்ரட்ஸ் கிடைப்பாங்களா?

     நிறைய பாட்டு எல்லாம் டீச்சர் சொல்லிக்கொடுப்பாங்க. எனக்கு வந்து சொல்லிக்கொடுக்கனும். சரியா?

      பாப்பாவுக்கு/தம்பிக்கு டய்லட் போகனும் என்றால் டீச்சரிடம் சொல்லனும். வேற எது என்றாலும் டீச்சரிடம் சொல்லவேண்டும்.

     பள்ளிக்கூடம் விட்டதும், நான் வந்து உன்னை கூட்டிக்கொண்டு போக வருவேன். உன்  நண்பர்களை எனக்கு காட்டு.
நானும்  அவர்களுக்கு ப்ரட்/Friend ஆகவேண்டும் என்று பிள்ளைகளுக்கு நல்ல ஊக்கம் கொடுங்கள்.

     பிள்ளைகள் பள்ளி விட்டு வந்ததும்,அவர்களிடம் டீச்சர் என்ன சொல்லிக்கொடுத்தார்கள் என்று கேட்டு வம்பு செய்யாதீர்கள். அவர்களாக சொல்லட்டும். முதல் நாள் பள்ளிக்கூடம் சென்று வந்ததும் மிகவும் களைப்பாக இருப்பார்கள். அவர்களுக்கு தேவையாவைகளை கொடுங்கள்.


     

     கூடுமான வரையில் நீங்கள் பள்ளிக்கு அழைத்து சொல்லுங்கள். முடியாது என்றால்,ஒருநாளைக்கு ஒரு வேலையாவது அழைத்து செல்லுங்கள். அது மிகவும் சந்தோஷபடும். பிள்ளைகளை விட என்ன காசு/சோம்பேறிதனம் முக்கியம்.

     சில பிள்ளைகள் பள்ளியை முதல் நாளே விரும்ப ஆரம்பிப்பார்கள். சில பிள்ளைகள் 1 வாரத்தில் விரும்ப ஆரம்பிப்பார்கள்.சிலர் ஒருமாதம் கூட ஆகும்.ஒரு சிலர் ஒரு வருடம் கூட ஆகும்.

      பயப்பட வேண்டாம்.இதற்கு ஆசியர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
சில நாடுகளில் பள்ளியின் முதல்நாளே நிறைய பாடங்களை நடத்துகிறார்கள். மேலும் வீட்டு பாடங்கள் கொடுத்து சின்னஞ்சிறு பிள்ளைகளை கஷ்டப்பட வைக்கக்கூடாது.

     பிள்ளைகள் முதல்நாளற்று அழத்தான் செய்வார்கள்.அதனால்,நீங்களும் அழத்தொடங்கி விடாதீர்கள். மிகவும் சமாதனம் செய்யவும் முயலவேண்டாம். பிறகு சமாதனம் சொல்லிக்கொள்ளலாம். ஆசிரியர்கள் அவர்களை கவனித்து கொள்ள தவறக்கூடாது.

      பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகும் போது முத்தம் கொடுத்து அனுப்புங்கள். அதுப்போலவே,பள்ளி விட்டு திரும்பும் போதும் ஒரு முத்தம் கொடுங்கள்.

     பள்ளிக்கூடம் நன்றாக பழகியதும்,நீங்களே ஆச்சரியபடும்படி இருக்கும்.
பொறுத்திருந்து பாருங்களேன். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.






அதற்கு நீங்கள்தான் கேரன்டி./Garenty
தொடர் தொடரும்.

copyright©Sep2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts