Chocotrobon/சோக்கோட்ரோபோன்





     இது சாக்லெட் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
இது கொஞ்சம் புதுமாதிரி.

     இதில் அதிகமாக சாக்லெட் உண்டு. ஆனால் மாவு கிடையாது.
செய்து சாப்பிட்டுதான் பாருங்களேன்.


     நான் செய்தது டார்க் சாக்லெட்டில். உங்களுக்கு டார்க் சாக்லெட் பிடிக்கவிலை என்றால் மில்க் சாக்லெட்டில் செய்துக்கொள்ளுங்கள்.

     இங்கு நிறைய பேருக்கு பிடித்தது டார்க் சாக்லெட்டுதான். எங்களுக்கும் டார்க் சாக்லெட் பிடிக்கும். அதனால் டார்க் சாக்லெட்டில் செய்தேன்.

இதற்கு தேவையானது:
  • சாக்லெட் 200 கிராம்
  • டின் பால்/concentrated milk sweetened/lait concentré sucré 200  கிராம்
  • வெண்ணெய் 100 கிராம்
  • மைதா 30 கிராம்
  • முட்டை 4

செய்முறை:


1)முதலில் சாக்லெட்டையும் வெண்ணெய்யையும் டபுள் பாயிளர் முறையில் உருக்கிக்கொள்ளவும்.




2)ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றவும். அதிலேயே டின் பாலையும் ஊற்றவும்.





3)முட்டையையும் பாலையும் நன்றாக அடிக்கவும்.




4)நன்றாக அடித்ததும்,அதில் உருக்கி வைத்திருக்கும் வெண்ணெய்யையும் சாக்லெட்டையும் அதில் ஊற்றவும்.






நன்றாக சாக்லெட்டும் முட்டையும் கலக்கவும்.




5)அதுவும் நன்றாக கலந்த பின்பு, மைதாவை அதில் போடவும்.அதையும் நன்றாக கலந்து விடவும்.



6)அவணை 180°c யில் முற்சூடு செய்யவும்.

7)கலந்து விட்ட பின்பு அவணில் வைக்கும் தட்டில் வெண்ணெய் தடவி, அதில் ஊற்றி அவணில் வைக்கவும்.

8)175° c யில் 25 நிமிடங்கள் அவணில் வைக்கவும்.




வெந்ததும் அவணிலிருந்து எடுத்து ஆறியதும் சாப்பிடவும்.
copyright©sep2014kolly2wood.blogspot.com



Comments

Popular Posts