பாஸ்தாவிற்கான மாவு/ Pâtes à pâtes 1





     பாஸ்தாவிற்கான மாவு செய்யலாமா? வாங்க.

      நாம் கடையில் வாங்குவது காய வைத்த பாஸ்தாதானே!
ஃப்ரஷ் பாஸ்தா நாமே வீட்டில் செய்யலாம்.

     ஃப்ரஷ் பாஸ்தா இரண்டு விதமாக செய்வார்கள். இங்கு நான் சொல்லப்போவது ஒருமுறை. அடுத்த முறை, இன்னோரு முறை சொல்லிக்கொட்டுகிறேன்.

       போகலாமா! பாஸ்தா செய்ய!

இதற்கு தேவையானவை:
  • ரவை 100 கிராம்
  • மைதா 200 கிராம்
  • முட்டை 3
  • தண்ணீர்
  • உப்பு தேவையான அளவு


செய்முறை:
1)ரவையும் மைதாவையும் உப்புடன் கலந்து விடவும்.

2)மாவில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக பிசையவும்.




3)தேவையானால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசையவும். ஊற்றி அல்ல. தண்ணீர் தெளித்து பிசையவும். அதிகம் தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

4)பிசைந்த மாவை 1 மணி நேரம் துணியை போட்டு அப்படியே வைக்கவும்.
பாஸ்தாவிற்கு மாவு தயாராகி விட்டது.




5)1 மணி நேரத்திற்க்கு பிறகு பிசைந்து வைத்த மாவை உருட்டி உங்களுக்கு வேண்டிய வடிவில் வெட்டவும்.

6)வெட்டிய மாவை கொஞ்சம் நேரம் உலர வைக்கவும்.

7)உலரந்து வெட்டிய மாவை வேக வைக்கவும்.

பாஸ்தா தயார்.

 copyright©Sep2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts