சாக்லெட் & தேன் கலந்த கோழி/Poulet au Miel et chocolat





       இந்த கோழிக்கறி இனிப்பும் காரமும் கலந்தது. இது கொஞ்சம் என் பாணியிலும் செய்து இருக்கிறேன்.

வாங்க சாக்லெட் கோழி செய்யலாம்.
பயப்படாம வாங்க,செய்லாம்.

இதற்கு தேவையானது:
  • கோழி துடை 6 அல்லது முழுக்கோழி 2
  • எண்ணெய் 50 மில்லி
  • சாக்லெட் பவுடர் 4 - 6 மேஜைக்கரண்டி
  • மிளக்காய் தூள் 2 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் 4 டீஸ்பூன்
  • உப்பு 1 டீஸ்பூன்

சாஸ் 
  • ரம்/Rhum 100 மில்லி
  • எலுமிச்சைப்பழச்சாறு 100 மில்லி
  • தேன் 100 மில்லி


செய்முறை:

1)ஒரு பவுலில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி  சாக்லெட்,உப்பு,மிளகு,மிளக்காய் தூள் போட்டு கலந்து விடவும்.




2)அதிலேயே கோழியை போட்டு பிரட்டி ஒரு பத்து நிமிடங்களாவது ஊற விடவும்.




3)கறி ஊறிக்கொண்டு இருக்கும்போதே ஒரு சாஸ் செய்யலாம்.

4)ஒரு பவுலில் ரம்,எலுமிச்சைச்சாறு,தேன் இந்த மூன்றையும் ஒரு கரண்டியால் நன்றாக கலந்து விடவும். தேன் நன்றாக கலந்து வரும்வரை கலக்கவும்.



      
இந்த சாஸ்ஸை ஒரு பக்கம் வைத்து விடுங்கள்.

5)ஒரு அகலமான வாணலில் எண்ணெய் ஊற்றி,சூடானதும் ஊறிய கோழியை இரண்டு பக்கமும் சிவக்கவிடவும்.லேசாக சிவந்தாலே போதும்.




6)இப்படி லேசாக சிவந்த கோழியை வாணலில் இருந்து எடுத்து விடாதீர்கள்.

7)அப்படியே வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் நாம் கலந்து வைத்திருக்கும் கோழியின் மேல் சாஸ்ஸை ஊற்றி 2 நிமிடங்கள்  சிவக்க விடுங்கள்
8)கோழியை திருப்பி போட்டு அதிலும் 2 டீஸ்பூன் சாஸ்ஸை ஊற்றி வேக விடவும்.

9)மீண்டும் மீண்டும் இது மாதிரியே 5 - 6 முறைகள் திரும்ப திரும்ப செய்யவும்.
கோழியில் கராமல் கலந்து சிவப்பாக இருக்கும்.

10)அதற்குள் அவணை மூற்சூடு செய்யவும் 200°c.

11)அவணை 190°c ஆக குறைத்து வைக்கவும்.

12)கோழியை அவணின் தட்டில் வைத்து 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.

13)கோழியை அவணில் வைக்கும் முன்பு, கோழியின் மேல் ரம் சாஸ்ஸை ஒவ்வொரு கோழியிலும் 2 டீஸ்பூன் ஊற்றவும்.

14)அவணில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிடவும்.

15)10 நிமிடங்கள் போனதும், கோழியை வெளியில் எடுத்து மறுப்பக்கம் திருப்பி போட்டு ரம் சாஸ்ஸை ஊற்றவும்.



16)மீண்டும் 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.

17)வெந்து கறி நன்றாக கராமலைஸ்டு ஆனதும், அவணிலிருந்து எடுத்துவிடவும்.

18)அதற்குள்,ரம் சாஸ் வைத்திருக்கும் அல்லவா? அதை தயாரித்துக்கொள்ள வேண்டும்.

19)அதனை ஒரு ஏனத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து சிறு தீயில்  10 - 15 நிமிடங்கள் வைக்கவும். சாஸ்  பாதியாக சூண்ட வேண்டும். அடுப்பை நிறுத்தி விடுங்கள்

கோழியும் வெந்து விட்டது. சாஸ்ஸும் தயாராக உள்ளது.

20)Jus de cuisson:
கோழி அவணில் வெந்த பின்பு அந்த அவண் தட்டில் எண்ணெயும் கோழி சாஸ்ஸும் கலந்து இருக்கும் அதனையும் தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.

21)இனிமேல் என்ன? கோழியை தட்டில் வைத்து, அதில் ரம் சாஸ்ஸூம், கோழி வெந்த சாஸ்ஸூம் இருக்கிறது அல்லவா? அதனை கோழியின் மேல் ஊற்றி சாப்பிடவும்.

       கராமல் கலந்து கொஞ்சம் காரமாக இருக்கும் . சாப்பிட நன்றாக இருக்கும்.

copyright©Sep2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts