Banana and Muesli smoothie/ வாழைப்பழம் ம்யூஸ்லி ஸ்மூத்தி





       காலை நேரத்தில் எதுவும் சாப்பிட பிடிக்காத பிள்ளைகளுக்கு இதனை குடிக்க கொடுக்கலாம். இதில் வாழைப்பழமும் செரியாலும் இருப்பதால் உடலுக்கு வலுவாக இருக்கும். இதில் எல்லாவிதமான வைட்டமீன்களும் இருக்கிறது.

      பிள்ளைகள் ஒரு கப் அல்லது அரைக்கப் குடித்தாலே போதும்.
4 வயது குழந்தைகளுக்கு இதனை கொடுக்கலாம்.

இதற்கு தேவையானது:
  • வாழைப்பழம் 1
  • பால் 2 கப்
  • ம்யூஸ்லி /Muesli  4 டேபிள் ஸ்பூன்
  • சர்க்கரை உங்களுக்கு தேவையான அளவு


செய்முறை:

1)ப்ளன்டரில் வாழைப்பழம்,செரியால்,பால்,சர்க்கரை எல்லாவற்றையும் 

போட்டு 1 அல்லது 2 நிமிடங்கள் ஒடவிடவும்.


2)வாழைப்பழம் நன்றாக மசிந்து இருக்க வேண்டும்.

ஸ்மூத்தி ரெடியாகி விட்டது.


3)ஒரு டம்ளரில் ஊற்றி குடிக்கலாம்.


தேவை என்றால்,ஐஸ் போட்டும் குடிக்கலாம்.
Copyright Sep2014©kolly2wood.blogspot.com

Comments

Popular Posts